சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இரும்பு கம்பியில் அமர்ந்திருந்த எமன்!

சன்ரூஃப் வழியாக சிறுவன் ஒருவர் எட்டிப்பார்த்துக்கொண்டே காரில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமான சாலையில் குறுக்கே வைக்கப்பட்ட இரும்பு கம்பி தடுப்பில் சிறுவனின் தலை அடிபட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இன்று பலர் சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் வாகனங்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்கை காணலாம் வாருங்கள்.

இன்று வாகனங்களில் சன்ரூஃப் ஒரு முக்கிய வசதியாக வந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதால் ஒரு காலத்தில் பணக்காரங்கள் வாங்கும் காரில் ஒரு சொகுசு அம்சமாக இருந்த இந்த வசதி தற்போது சிறிய ரக கார்களிலும் வந்துவிட்டது. சன்ரூஃப் அம்சத்தின் உண்மையான பயன்பாடு தெரியாமல் பலர் அதை ஆபத்தான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Sunroof Accident

இப்படி தான் சமீபத்தில் பெங்களுருவில் ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூருவில் உள்ள ஜிகேவிகே சாலையில் உள்ள கேமராவில் தான் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ 3rdEyeDude என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ சிவப்பு நிற கார் ஒன்று வருகிறது. இந்த காரில் சன்ரூஃப் ஆப்ஷன் இருக்கிறது. இதில் சன்ரூஃப் வழியாக ஒரு சிறுவன் எட்டிப்பார்த்துக்கொண்டே வருகிறார். கார் ஓட்டுபவர் சாலையை கவனித்து காரை ஓட்டிச் செல்கிறார்.

அப்பொழுது அந்த சாலையின் குறுக்க பெரிய வாகனங்கள் அல்லது கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக தடுப்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி செல்பவர் அதை பொருட்படுத்தாமல் காரில் செல்கிறார். அவர் கார் எளிதாக அந்த தடுப்பு கம்பிக்கு கீழ் தான் செல்லும். ஆனால் காரை ஓட்டி செல்பவர் சிறுவன் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்துக்கொண்டே வருகிறான் அவனுக்க இந்த கம்பி தட்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் செல்கிறார்.

Sunroof Accident

கார் சென்ற வேகத்தில் சிறுவனின் தலையில் இரும்பு கம்பி பலமாக அடிக்கிறது. அடித்த வேகத்தில் சிறுவன் பின்னோக்கி வளைகிறான். ந்த காட்சிகள் தான் இந்த வீடியோவில் இருந்தன. இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசி வருகின்றனர்.

பொதுவாக ஒரு வாகனத்திற் சன்ரூஃப் என்பது காரின் விட வெளியில் கிளைமேட் சிறப்பாக இருந்தால் அதை காருக்குள்ளும் அனுபவிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் சன்ரூஃப்பை திறந்து விட வேண்டும் வெளியில் உள்ள கிளைமேட்டை காருக்குள்ளும் உங்களால் உணர முடியும் இதற்காக தான் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இது வெளிநாடுகளில் பல நேரங்களில் நல்ல கிளைமேட் இருக்கும் இடத்தில் பயன்படுத்த முடியும். இந்தியாவில் சன்ரூஃப் ஒரு தேவையில்லாத அம்சம் தான்.

Sunroof Accident

ஆனால் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள டிமாண்டிற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சன்ரூஃப்பை பொருத்தி வருகின்றனர். இதை வாங்குபவர்கள் இதற்கான பலன் தெரியாமல் குழந்தைளை வைத்து எட்டி பார்க்க வைத்து வாகனம் ஒட்டுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். இந்த சன்ரூஃப் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது மட்டுமல்ல நீங்கள் காரில் செல்லும் போது வேகமாக பிரேக் பிடித்தால் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பேலன்ஸ் இல்லாமல் காரிலிருந்து கீழ விழ வழிவகுக்கும். பல விபத்துகள் இப்படியம் நடந்துள்ளது. இதனால் நீங்கள் சன்ரூஃப் வைத்த காரை வாங்கினாலும் அதை எட்டிப்பார்ப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். அதை காற்று அனுபவத்திற்காக மட்டும் பயன்படுத்துவது தான் நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 7:00 [IST]
English summary
Sunroof accident child injured bengaluru road viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X