மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் அதிவேக மற்றும் சொகுசு ரயில்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இந்திய மக்கள் பயன்படுத்தி வரும் மிக முக்கியமான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக ரயில்கள் (Trains) திகழ்கின்றன. ரயில்கள் மூலமாக பல்வேறு நகரங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக பல்வேறு வகையான ரயில்களை இந்திய ரயில்வே (Indian Railways) இயக்கி வருகிறது.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இதில், சொகுசு ரயில்கள், அதிவேக ரயில்கள், முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பிரீமியம் ரயில்கள் என பலதரப்பட்ட ரயில்கள் அடங்குகின்றன. இந்தியாவில் தற்போது இயக்கப்பட்டு வரும் முக்கியமான ரயில்கள் குறித்தும், அந்த ரயில்களில் என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன? எவ்வளவு வேகத்தில் செல்லும்? என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்களையும்தான் இந்த செய்தியில் படிக்க போகிறீர்கள்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (Rajdhani Express)

புது டெல்லியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தேசிய தலைநகரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. மணிக்கு 130-140 கிலோ மீட்டர் வேகத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முழுமையாக குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இது அதிவேகத்தில் பயணிக்க கூடிய தொலை தூர ரயில் ஆகும். குறிப்பிட்ட நிறுத்தங்களில் (Limited Stops) மட்டுமே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படும். ஆட்டோமேட்டிக் டோர்கள் மற்றும் பவர் சாக்கெட்கள் என பல்வேறு அதிநவீன வசதிகளை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றுள்ளது. பயணத்தின்போது இலவசமாகவே உணவு வழங்கப்படும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

துராந்தோ எக்ஸ்பிரஸ் (Duronto Express)

ஒரு சில துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக குளிர் சாதன வசதியுடன் இயக்கப்படுகின்றன. அதே சமயம் குளிர் சாதன வசதி இல்லாத ஸ்லீப்பர் க்ளாஸ் வசதியுடனும் துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 145 கிலோ மீட்டர்கள் ஆகும். குறைவான நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இந்தியாவின் பல்வேறு மாநில தலைநகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களை துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைக்கின்றன. இது பிரீமியம் ரகத்தை சேர்ந்த தொலை தூர சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஆகும். டிக்கெட் கட்டணத்திலேயே சாப்பாடு அடங்கி விடும். மிகவும் சௌகரியமான உட்புறத்தை துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெற்றுள்ளன.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

சொகுசு ரயில்கள் (Luxury Trains)

இந்தியாவில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளுக்கு சொகுசு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சொகுசு ரயில்கள் மிக அழகாகவும், மாளிகை போன்றும் இருக்கும். இந்த சொகுசு ரயில்களில் பயணம் செய்வது உற்சாகமான மற்றும் மறக்க முடியாம அனுபவத்தை தரும். எனவே வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த சொகுசு ரயில்களில் பயணித்து விட வேண்டும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் தற்போது ஏராளமான சொகுசு ரயில்கள் இருக்கின்றன. இதில், பேலஸ் ஆன் வீல்ஸ் (Palace on Wheels), ராயல் ஓரியண்ட் (Royal Orient), ஃபேர்ரி குயின் (Fairy Queen), டெக்கான் ஒடிசி (Deccan Odyssey), கோல்டன் சேரியட் (Golden Chariot), மஹாராஜா எக்ஸ்பிரஸ் (Maharaja Express), ராயல் ராஜஸ்தான் (Royal Rajasthan) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இவை இந்திய ரயில்வே மூலம் இயக்கப்படும் சில சொகுசு ரயில்கள் ஆகும். ஏற்கனவே கூறியது போல், இந்த சொகுசு ரயில்களை சுற்றுலா ரயில்கள் என்றும் சொல்லலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த சொகுசு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற ரயில்களை காட்டிலும், இந்த சொகுசு ரயில்களில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகமாக இருக்கும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

சதாப்தி எக்ஸ்பிரஸ் (Shatabdi Express)

இவை பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் ரயில்கள் ஆகும். குறுகிய மற்றும் நடுத்தர தொலைவுகளுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரே நாளில் இந்த ரயில்கள் ரவுண்ட் ட்ரிப்களையும் (Round Trips) அடிக்கும். இது முக்கியமான இந்திய நகரங்களை இணைக்கும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் ஆகும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

பெர்த்களுக்கு (Berths) பதிலாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கும். ரயிலில் தூங்குவதற்கான இடம்தான் 'பெர்த்' எனப்படுகிறது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படுவதால்தான் அவற்றில் 'பெர்த்' இருப்பதில்லை. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கிலோ மீட்டர்கள் ஆகும்.

மிஸ் பண்ணீர கூடாது... இந்தியாவில் ஓடும் இந்த ரயில்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போகணும்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் இயக்கப்படும் வேகமான ரயில்களில் இதுவும் ஒன்று. இதன் இன்டீரியர்கள் உயர் தரத்தில் இருக்கும். இது முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட ரயில் ஆகும். இதுபோன்ற ரயில்கள் பயணம் செய்தால், பெரிதாக களைப்பு தெரியாது. சென்று சேர வேண்டிய இடத்தை விரைவாகவும், சொகுசாகவும் அடைந்து விடலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 18:44 [IST]
English summary
Super fast luxury trains in india from shatabdi express to palace on wheels
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+