மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

Written By:

வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளின் அலட்சியம், சாலை விதிமீறல்கள், அதிவேகம் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனால், உயிரிழப்புகளும் தொடர்ந்து அபாயகரமான எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் நடந்த பயங்கர சாலை விபத்து ஒன்று இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

கேரள மாநிலம் கொல்லம் நகரில் நடந்த இந்த விபத்தில் மாருதி ஆல்ட்டோ 800 காருடன் அதிவேகமாக வந்த இரண்டு சூப்பர் பைக்குகள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

மாருதி ஆல்ட்டோ 800 கார் ஒன்று யூ-டர்ன் போட எத்தனித்தபோது, எதிர்திசையில் ஒன்றன் பின் ஒன்றாக சீறி வந்த கவாஸாகி வெர்சிஸ் 650 சூப்பர் பைக்கும், ட்ரையம்ஃப் டேடோனா 675 பைக்கும் கார் மீது அடுத்தடுத்து மோதின.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

இந்த விபத்தில் கவாஸாகி வெர்சிஸ் 650 சூப்பர் பைக்கை ஓட்டி வந்தவர், ட்ரையம்ஃப் டேடோனா 675 பைக்கை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தனர். ஆல்ட்டோ காரை ஓட்டி வந்தவரும் காயமடைந்தார். சம்பவத்தை பார்த்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

அப்போது வழியிலேயே கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். ட்ரையம்ஃப் டேடோனா பைக்கை ஓட்டி வந்தவர் படுகாயங்களுடனும், மாருதி ஆல்ட்டோ காரை ஓட்டி வந்தவர் காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

இந்த விபத்தில் இரண்டு சூப்பர் பைக்குகளும் சுக்கு நூறாக நொறுங்கின. மாருதி ஆல்ட்டோ 800 காரின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்துக்கான காரணம், யார் மீது தவறு என்பது குறித்த செய்திகள் முழுமையாக கிடைக்கவில்லை.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. இதுபோன்ற விபத்துக்கள் மூலமாக எந்தளவு வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகமாக செயல்பட வேண்டும் என்பதே இந்த செய்தியை நாம் வெளியிடுவதற்கு காரணம். சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கான சிறந்த சாலை கட்டமைப்புகளும், சாலை விழிப்புணர்வு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுமே இவ்வாறான விபத்துக்கள் தொடர்கதையாக காரணமாகி உள்ளது.

மாருதி ஆல்ட்டோ காருடன் பயங்கரமாக மோதிய சூப்பர் பைக்குகள்... ஒருவர் பலி!

சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு போதிய பயிற்சியை பெறுவது அவசியம். அத்துடன் வேகமாக செயல்படுவது அவசியம். அதேபோன்று, வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடை பிடிப்பதும் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும்.

Image Source

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Superbike Fatal Crash at Kerala.
Please Wait while comments are loading...

Latest Photos