ஒரு பைசா கூட செலவு பண்ணாம சூப்பர் கார்களை சொந்தமாக்கிய போலீஸ்! இப்படி கூட செய்ய முடியுமா?

துபாயை தொடர்ந்து தற்போது துருக்கி போலீஸ் படையிலும் 23 சூப்பர் கார்கள் ரோந்து பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் துருக்கி போலீசார் இந்த கார்களை தங்கள் பணிக்காக சேர்த்துள்ளனர். இது எப்படி நடந்தது? செலவே செய்யாமல் எப்படி துருக்கி போலீசார் இவ்வளவு அதிக மதிப்பு கொண்ட கார்களை எல்லாம் வாங்கினார்கள் என்ற விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் போலீஸ் படையில் சூப்பர் கார்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதாவது துபாய் போலீசார் மாநகரில் ரோந்து பணிகள் மற்றும் பிற பணிகளுக்காக பயன்படுத்தும் கார்களில் சூப்பர் கார்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது உலகிலேயே முதல் முறையாக போலீஸ் படையில் சூப்பர் கார்ஸ் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

supercar turkish police

தற்போது துபாயை தொடர்ந்து துருக்கி நாட்டிலும் இதுபோன்ற 23 சூப்பர் கார்கள் தற்போது போலீசார் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை அந்நாட்டின் அமைச்சர் அலி யர்லிக்காயா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த கார்களை எல்லாம் தூக்கி போலீசார் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் சொந்தமாக வாங்கியுள்ளனர்.

இவ்வளவு கோடி மதிப்பிலான காரை எப்படி ஒரு பைசா கூட செலவு செய்யாமல் வாங்கினார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கு போலீசார் செய்த உழைப்பு தான் மிக முக்கியமான காரணம். துருக்கி நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் விநியோகம் மிக அதிகமாக இருந்து வந்துள்ளது.

supercar turkish police

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி இப்படியான போதை பொருளை சப்ளை செய்யும் நபரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் ஹக்கான் ஆயிக் என்பவர் தான் துருக்கி நாட்டில் தலைமையாக போதைப் பொருளை விநியோகம் செய்து வருவதாக கண்டுபிடித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் துருக்கி போலீசார் நாட்டில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர்களை மடக்கிப் பிடிக்க மிகப்பெரிய திட்டமொன்றை போட்டனர். ஒரே ஆபரேஷனில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் போதை பொருட்களை விநியோகம் செய்யும் டீலர்கள் பலர் சிக்கினார்கள். முக்கியமாக அந்த கூட்டத்தின் தலைவனான ஹக்கான் ஆயிக் என்பவர் சிக்கினார் அவர்களிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

supercar turkish police

அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் நடந்த இந்த சம்பவத்தில் அவரிடம் உள்ள சூப்பர் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது கோர்ட் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை போலீசில் ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது. அதை போலீசார் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பெயரில் அவரிடம் இருந்த சூப்பர் கார்களான பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, எலெக்ட்ரிக் போர்ஷே டேகன், ஃபெராரி 458 கோல்ஃப் ஜிஆர் உட்பட பல சூப்பர் கார்களும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் போன்ற எஸ்யூவி கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 23 சொகுசு கார்கள் இவரிடம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த காரை தற்போது போலீசார் தங்கள் ரோந்து பணி மற்றும் மற்ற பணிகளுக்காக பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதற்காக இந்த காரை போலீஸ்கார்களாக மாற்றி பதிவெண்ணை எல்லாம் போலீஸ்காருக்கு மாற்றி காரையும் போலீஸ்காரர் போல கஷ்டம் செய்து தற்போது இதை தூக்கி போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோவை தான் நாட்டு அமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

துருக்கினாலும் தற்போது சூப்பர் கார்களைக் கொண்ட போலீஸ் படை நாடாக மாறியுள்ளது. பலர் தங்கள் போலீஸ் படைகளின் பலத்தை அதிகரிக்க அவர்களது வாகனத்தை சிறப்பாக மாற்ற வேண்டும் என பேசி வருகின்றனர். இந்நிலையில் துருக்கி நாட்டில் சூப்பர் கார்கள் போலீஸ் படையை சேர்ந்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதுவும் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் அவர்கள் சூப்பர் காரை வாங்கிய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

துருக்கி நாட்டை போல மற்ற நாடுகளும் நம் நாட்டில் மிகப்பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அதை நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சொத்தாக மாற்றி அதை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ஆயுளை இழந்து விடும். அதற்கு முன்னராக அதன் முழு பலனையும் நாம் பெற்றுவிட வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போதை பொருள் என்பது ஒரு நாட்டை மிக மோசமாக சீரழித்து விடும். அதனால் அதை விநியோகம் செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து இப்படியாக நாட்டு சொத்தாக மாற்றி அதை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர மற்ற நாடுகளும் துருக்கி போல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 12:41 [IST]
English summary
Supercar turkish police enhance fleet with free supercars for law enforcement
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X