இனி பறந்து வந்து மீட்புப் பணிகள்... ஜெட்பேக்குகளை வாங்கும் துபாய் அரசு!

By Saravana

பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை நவீனமாக்குவதில் துபாய் அரசு தீவிரம் காட்டி வருகிறது. உலகின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களையும், சொகுசு கார்களையும் போலீசாருக்கு வாங்கி கொடுத்த அந்த நாட்டு அரசு தற்போது தீயணைப்புத் துறையின் சேவை விரைவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் விதத்தில் ஜெட்பேக்குகளை வாங்குகிறது.

இதற்காக, ஜெட்பேக் தயாரிப்பில் புகழ்பெற்ற மார்ட்டின் ஏர்கிராஃப்ட் நிறுவனத்துடன் துபாய் அரசின் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஜெட்பேக்குகள் மூலமாக மீட்புப் படையினர் மிக விரைவாக சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆர்டர்

ஆர்டர்

மொத்தம் 20 ஜெட்பேக்குகளை துபாய் அரசு வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. கடந்த 9ந் தேதி துபாய் ஏர் ஷோவின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டு வகை

இரண்டு வகை

மீட்புப்படையினர் மற்றும் ஆள் இல்லாமல் இயக்கும் வகையில், இரண்டுவிதமான ஜெட்பேக்குகள் வாங்கப்பட உள்ளது.

பயிற்சி

பயிற்சி

ஆட்கள் மூலமாக செலுத்தக்கூடிய ஜெட்பேக்குகளை இயக்குவதற்கும், அதிலுள்ள தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மீட்புப் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு பயிற்சி கொடுக்கும் விதத்தில் இரண்டு சிமுலேட்டர்களும் வாங்கப்படுகின்றன.

விரைவான சேவை

விரைவான சேவை

மார்ட்டின் ஜெட்பேக்குகள் 3,000 அடி உயரம் வரை வானில் பறக்கும். மணிக்கு 74 கிமீ வேகத்தில் 30 நிமிடங்கள் வரை பறப்பதற்கான எரிபொருள் இருக்கும்.

வசதி

வசதி

இந்த ஜெட்பேக்குகள் நின்ற நிலையிலிருந்து செங்குத்தாக மேலே எழுப்பவும், தரையிறங்கும் வசதியை கொண்டது. எனவே, எந்தவொரு இடத்திலிருந்தும் இயக்கும் வசதி கொண்டது. அதேபோன்று, எந்த பகுதியிலும் எளிதாக தரையிறக்க முடியும்.

முதலுதவி மற்றும் சேவை

முதலுதவி மற்றும் சேவை

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வசதிகள் உள்ளன. ஒருவர் செல்லும் வசதி கொண்ட ஜெட்பேக்குகளில் 120 கிலோ எடையுடைய பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். மருந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள் போன்றவற்றை சுமந்து செல்லும்.

எளிது

எளிது

அடுக்குமாடி கட்டடங்களில் தீயணைப்பு மற்றும் சிக்கியவர்களை மீட்பதில் அதிக சிரமங்கள் உள்ளன. ஆனால், இந்த ஜெட்பேக்குகள் மூலமாக அவர்களுக்கு உடனடி உதவியும், தீயணைப்புப் பணிகளையும் விரைவாக செய்ய முடியும்.

டெலிவிரி

டெலிவிரி

அடுத்த ஆண்டு ஜெட்பேக்குகளை துபாய் அரசிடம் மார்ட்டின் நிறுவனம் டெலிவிரி கொடுக்க இருக்கிறது. தீயணைப்புப் படையினருக்கு, பயிற்சி கொடுக்கப்பட்டவுடன், இந்த ஜெட்பேக்குகளின் சேவை ஆரம்பமாகும்.

நகரங்களுக்கு அவசியம்...

நகரங்களுக்கு அவசியம்...

அடுக்குமாடி குடியிருப்புகளும், குறுகலான சாலைகள் மிகுந்த சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இயற்கை பேரிடர் மற்றும் ஆபத்து சமயங்களில் இதுபோன்ற ஜெட்பேக்குகளின் சேவை அவசியமானதாகவே இருக்கும். எனவே, முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற கருவிகளை வாங்குவது எதிர்காலத்தில் நிச்சயம் பயன்தரும்.

இதர தொடர்புடைய சுவாரஸ்யங்கள்

01. துபாய் போலீசாரின் கார் கலெக்ஷன்...

02. துபாயில் டாக்சியான சூப்பர் கார்கள்...

03. உலகில் போலீசார் பயன்படுத்தும் சூப்பர் கார்கள்...

More from DriveSpark

Article Published On: Monday, November 16, 2015, 11:06 [IST]
English summary
The Dubai police are well known for its fleet of ultra-exclusive supercars. Now, the Dubai Civil Defence Department has signed a deal with Martin Aircraft Company Limited for intended future delivery of manned and unmanned Jetpacks.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+