சூப்பர் கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல்... காரணம் என்ன?

Written By:

இரு நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் சூப்பர் கார்களை கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்துவது குறித்த வீடியோவை எமது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தோம். இந்த நிலையில், அந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றிய தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

அதாவது, தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன அணிவகுப்பில்தான் இந்த களேபரம் அரங்கேறியிருப்பது தெரிய வந்துள்ளது. மொராதாபாத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்திற்காக திரை உலக பிரபலங்களான உபன் பட்டேல் மற்றும் அப்தாப் சிவதாசனி ஆகியோரை அழைத்துள்ளார்.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பதால், மாஸ் காட்டுவதற்காக அந்த வேட்பாளரின் மகன் ஏராளமான சொகுசு மற்றும் சூப்பர் கார்களை அணிவகுப்பிற்கு எடுத்து வந்துள்ளார். சூப்பர் கார்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் புடைசூழ அந்த வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

அப்போது, அந்த வழியில் ராஷ்ட்ரிய லோக் தள கட்சியினரின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற ராஷ்ட்ரிய லோக் தள தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்தனர்.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வாகன ஊர்வலத்தில் பிரபல திரை நட்சத்திரங்கள் வருவதாக ஒலி பெருக்கியில் சொல்லப்பட்டதை கேட்டு, ராஷ்ட்ரிய லோக் தள கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நின்ற பொதுமக்கள் அங்கிருந்த சாலையை நோக்கி ஓடியுள்ளனர்.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஷ்ட்ரிய லோக் தள ஆதரவாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் ஊர்வலத்தில் பங்கேற்ற சூப்பர் கார்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால், அந்த ஊர்வலத்தில் இருந்த பல சூப்பர் கார்கள் கடுமையாக சேதமடைந்தன.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

லம்போர்கினி அவென்டேடார், ஃபெராரி 458 ஸ்பைடர், ஆடி ஏ7, பிஎம்டபிள்யூ இசட்4, டொயோட்டா ஃபார்ச்சூனர், டாடா சஃபாரி உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் இந்த தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தன. பல கார்களில் பின்புற கண்ணாடி உடைந்து போனது. இந்த தாக்குதலில் வேட்பாளர் ஊர்வலத்தில் வந்த சூப்பர் கார்கள் மட்டுமின்றி, அந்த சாலையில் சென்ற இதர கார்களும் இந்த தாக்குதலுக்கு இலக்கானது.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

இந்த திடீர் கல் வீச்சு தாக்குதலில் 50 கார்களுக்கும் மேல் சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

சூப்பர் கார்களை கல்லால் அடித்து விரட்டிய கும்பல்!

சூப்பர் கார்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதோடு, அதற்கான பாகங்கள் உடனடியாக கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. இதனால், அந்த கார்களை உடனடியாக இயக்குவதற்கு முடியாத நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Images Credit: Youtube

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

டிசைனில் ஆடி கார்களுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Supercars on the run from a stone pelting mob in Uttar Pradesh, India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark