ஊரே கூடி நின்னது இந்த காரை பார்க்கதானா? உள்ள இருந்த பிரபலத்தை பார்த்ததும் துள்ளி குதித்த மக்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் 170வது திரைப்படத்தின் படபிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஸ்கார்பியோ என் காரில் வந்தார். அவரிடம் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட ஏகப்பட்ட சொகுசு காரர்கள் இருக்கும்போது இந்த காரை அவர் ஏன் தேர்வு செய்தார் என இங்கு விரிவாக காணப்போகிறோம்

ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை நடித்து வருகிறார். இதற்கான பட பூஜை எல்லாம் கடந்த வாரம் நடந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படத்தின் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடியில் வைத்து நடந்து வருகிறது.

rajinikanth movie shooting in nellai

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கி நடந்து வந்த நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது பணகுடியில் வைத்து நடக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ எண்காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகை தந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவதை அறிந்து அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை காண்பதற்காக கூட்டமாக கூடி இருந்தனர். இந்நிலையில் அவர் வரும்போது ரசிகர்கள் கூட்டம் கூடி நிற்பதை பார்த்து காரை நிறுத்தி கார் கண்ணாடியை திறந்து ரசிகர்களுடன் கைகுலுக்கி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

rajinikanth movie shooting in nellai

தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவர் வந்த ஸ்கார்பியோ என் கார் குறித்து தான் அதிகமாக பேச்சு எழுந்து வருகிறது. ரஜினியிடம் பிஎம்டபிள்யூ கார் இருந்தாலும் அவர் ஸ்கார்பியோ காரில் தான் தற்போது சினிமா படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். இது குறித்து மக்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் ஏன் இந்த ஸ்கார்பியோ என் காரில் படப்பிடிப்பிற்கு வந்தார் என்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் முதலில் இந்த ஸ்கார்பியோஎன் காரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஸ்கார்பியோ கார் மிக நீண்ட காலமாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் ஒரு ஆஃப் ரோடு ரக காராகும் அதே நேரம் இதில் சொகுசு வசதிகளும் இருக்கிறது. இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த காரை தற்போது சூட்டிங் செல்ல பயன்படுத்த முக்கியமான காரணம்.

தற்போது பணகுடியில் உள்ள செங்கல் தள கல் தயாரிக்கும் ஆலையில் வைத்து தான் சண்டை காட்சிகள் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த இடம் ரோடு சரியில்லாமல் முற்றிலும் மண் பாதையிலான ரோடுகளை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் பயணிக்க ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த கார் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் ரஜினிகாந்த் இந்த காரை தேர்வு செய்து இதில் சூட்டிங் செல்ல பயன்படுத்தி வருகிறார்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை பொருத்தவரை மொத்தம் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. டீசல் வேரியன்டை பொறுத்தவரை எம் ஹார்க் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டை பொருத்தவரை எம்ஸ்டாலியன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இந்த காரின் டீசல் வேரியண்டையை அதிகம் விரும்புகின்றனர்.

இந்த காரின் டீசல் இன்ஜினை பொறுத்தவரை 20198 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 130.07 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 1997 சிசி இன்ஜின் 200 பிஎச்பி பவரையும் 370 என்எம் டார்க் திறனையும் கொண்டதாக இருக்கிறது. இதுவும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கார்பியோ என் காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 13.26 லட்சம் முதல் ரூபாய் 24.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் குறைந்த விலையாக 13.26 லட்சத்தில் பெட்ரோல் வேரியன்ட் தான் இருக்கிறது. டீசல் இன்ஜின் வேரியண்டில் ரூபாய் 13.76 லட்சம் தான் குறைந்த விலை வேரியண்டாக விற்பனையாகி வருகிறது. இந்தக் காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் புக்கிங் செய்து காட்டியிருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் 170 வது திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது சாலை வசதி இல்லாத பகுதியில் நடைபெறுவதால் அங்கு செல்ல ஆஃப் ரோடு அம்சம் கொண்ட காரை ரஜினிகாந்த் பயன்படுத்தி வருகிறார். இவர் இந்த காரை பயன்படுத்துவது தற்போது இந்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, October 10, 2023, 14:34 [IST]
English summary
Superstar rajinikanth arrived shooting spot in mahindra scorpio n car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+