சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது!

By Saravana Rajan

இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று 20 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பின்னர் ஒருவழியாக அரசியலில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு ஆதரவும், எதிர்ப்புமாக கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

சினிமாவில் பிரம்மாண்டத்தை காட்டி வரும் ரஜினிகாந்த் நிஜ வாழ்வில் எளிமையானவராகவே அறியப்படுகிறார். இந்த நிலையில், அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர், அவரது சொத்து மதிப்பு, ஆண்டு வருமானம் மற்றும் அவரிடம் உள்ள கார்கள் குறித்த விபரங்களை ஃபின் ஆப் தளம் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

ரஜினிகாந்திடம் தற்போது ரூ.360 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு உள்ளதாக ஃபின் ஆப் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. திரைப்படங்கள் மூலமாக அவருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.55 கோடி வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும், அவரிடம் ரூ.2.5 கோடி மதிப்புடைய கார்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

எளிமையான பிம்பத்தை உருவாக்கி இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஃபியட் பத்மினி மற்றும் அம்பாசடர் கார்களை பயன்படுத்தினார். பின்னர், ஹோண்டா சிவிக் காரை வைத்திருந்தார் என்பது அறிந்த விஷயம்.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

இந்த சூழலில், ரஜினிகாந்திடம் பென்ட்லி சொகுசு கார், ரேஞ்ச்ரோவர் சொகுசு கார் மற்றும் டொயோட்டா இன்னோவா கார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

ரஜினிகாந்திடம் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் கார் மாடல் இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இணையான ஆடம்பர கார் மாடலாக இது கருதப்படுகிறது. இடவசதி, சொகுசு அம்சங்களில் குறைவில்லாத மாடல் இது. இந்த கார் ரூ.4 கோடி மதிப்புடையது. வாங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில் இதன் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடி வரை இருக்கும்.

Recommended Video - Watch Now!
Actor Dulquer Salmaan's Brand New Porsche Panamera Turbo
ரஜினிகாந்த் கார்கள் விபரம்

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 500 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இரண்டரை டன் எடையுடைய இந்த பிரம்மாண்ட கார் ஆரம்ப நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 5.2 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்தது.

Trending On Drivespark:

ரிவர்ஸ் கியர் பெற்ற இந்தியாவின் முதல் ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிள்..!!

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

அடுத்து லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி காரும் ரஜினிகாந்திடம் இருக்கிறது. அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் விருப்பமான எஸ்யூவி வகை சொகுசு கார் மாடல். இந்த எஸ்யூவி ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

இந்த எஸ்யூவியில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காரில் 105 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. அதிகபட்சமாக 210 கிமீ வேகம் வரை செல்லும். ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களுக்கும் பிரபலமான சொகுசு எஸ்யூவி மாடல் இது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

டொயோட்டா இன்னோவா கார் நடிகர் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்தமான மாடல். கடந்த சில ஆண்டுகளாக இந்த காரை அவர் அதிகம் பயன்படுத்தி இருப்பது தெரிந்த விஷயம். ரஜினியிடம் முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் உள்ளது. மிக சிறப்பான இடவசதி, அதிர்வுகள் இல்லாத பயணத்தை தருவதே ரஜினியின் மனதுக்கு நெருக்கமான மாடலாக மாறி விட்டது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

ரஜினி வைத்திருக்கும் இன்னோவா காரில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்திடம் சொந்தமாக சூப்பர் கார் இல்லை என்ற பிரச்னை இல்லை. அவர் வெளிநாடுகள் செல்லும்போது சூப்பர் கார்களில் பயணித்து விடுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றிருந்த போது, அவர் ஃபெராரி கலிஃபோர்னியா டி காரில் நண்பருடன் வலம் வந்தது அறிந்ததே.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

அதேபோன்று, கடந்த ஆண்டு ரசிகர்களை சந்திக்க வந்தபோது பிஎம்டபிள்யூ எக்ஸ5 எஸ்யூவி காரில் வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க வந்தபோதும், பிஎம்டபிள்யூ காரில்தான் வந்தார். கண்ணாடி கூரையை திறந்து, நின்றபடி ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தார்.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

இந்த காரும் மிகவும் சக்திவாய்ந்த சொகுசு கார் மாடல். இந்த காரில் 258 பிஎச்பி பவரையும், 580 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ.80 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

ரஜினிகாந்த் கார்கள் விபரம்

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையிலிருந்து விலகி அரசியலுக்கு வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பும், கார்கள் குறித்த விபரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதால், புதிய சொகுசு காரை பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

Trending On Drivespark:

மைக்கேல் ஜாக்ஸன் ஸ்டைல் போக்குவரத்து காவலர்!!

கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ- ட்யூப் வீடியோ பகுதி!

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Superstar Rajinikanth's Cars and Its Net Worth Details Revealed.
Story first published: Tuesday, January 2, 2018, 15:19 [IST]
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more