ரஜினியிடம் ரோல்ஸ்ராய்ஸ் இல்லாத குறையை போக்க வரும் லிங்கா!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லிங்கா படம் நாளை ரிலீசாகிறது. லீவு போட்டு லிங்காவை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த லிங்கா படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடமேற்று நடித்திருக்கிறார். இரண்டு காலக்கட்டத்தில் நடைபெறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பழைய விண்டேஜ் கார்களும், நவீன தலைமுறை கார்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சொந்த வாழ்க்கையில் எளிமையான கார் மாடல்களை பயன்படுத்தும் ரஜினி இந்த சினிமாவில் விலையுயர்ந்த பல கார்களுடன் ரசிகர்களை கவர வருகிறார்.


விண்டேஜ் கார்கள்

விண்டேஜ் கார்கள்

இந்த படத்தில் பழைய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்கள் புடைசூழ ரஜினிகாந்த் வரும் காட்சி. இந்த காட்சிக்கு ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கும் என்பதை இந்த காட்சி அமைப்பை பார்த்தாலே உணர முடிகிறது.

 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

முந்தைய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரும் இடம்பெற்றிருக்கிறது. டாடா சஃபாரிக்கு பின்னர் சினிமா வில்லன்களின் காராக மஹிந்திரா ஸ்கார்ப்பியோக்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆடி க்யூ7

ஆடி க்யூ7

இந்த படத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ தவிர்த்து ஆடி க்யூ7 எஸ்யூவியும் இடம்பெற்றிருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் இல்லாமலா...

ரோல்ஸ்ராய்ஸ் இல்லாமலா...

சினிமா இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய் ஆகியோர் ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைந்துவிட்டனர். ஆனால், ரஜினி இணையவில்லை என்று அவரது ரசிகர்களுக்கு வருத்தமிருக்கிறது. அந்த வருத்தத்தை போக்கும் விதத்தில் இந்த படத்தில் விண்டேஜ் ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ரோல்ஸ்ராய்ஸ் தவிர ஹம்மர் லிமோசின் மாடலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஸ்டைல்

ஸ்டைல்

வயசானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதை உணர்த்தும் வகையில், ரோல்ஸ்ராய்ஸ் காரையே மறக்கடிக்கச் செய்யும் ரஜினியின் ஸ்டைலான நடை. தியேட்டரில் இந்த காட்சிக்கும் காதை பிளக்கும் விசில் கியாரண்டி.

ஃபெராரி வேர்ல்டு

ஃபெராரி வேர்ல்டு

இந்த படத்தில் அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்டு பொழுதுபோக்கு பூங்காவும் ட்ரெயிலரில் வருகிறது. மொத்தத்தில் ரஜினி கேரக்டரின் பணக்காரத்தன்மையை உணர்த்தும் விதத்தில் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இரட்டிப்பு மகிழ்ச்சி

இரட்டிப்பு மகிழ்ச்சி

நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாள். பிறந்தநாள் மற்றும் லிங்கா ரிலீஸ் என ரஜினிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாளாக அமைய உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2014, 17:36 [IST]
English summary
The most awaited Superstar Rajinikanth’s Lingaa movie is getting ready for a release on the December 12 on the event of the Superstar’s birthday. Take look at the cars used in this film.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+