சகல சவுபாக்கிய வசதிகளுடன் உலகின் மிக மிக அழகான ஆடம்பர படகு!
அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட உலகின் மிக அழகான ஆடம்பர படகின் கான்செப்ட் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல டிசைனர் இகோர் லோபனோவ் இந்த படகை வடிவமைத்துள்ளார்.
மிகவும் வித்தியாசமாக அரை நட்சத்திர வடிவில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகிற்கு ஸ்டார் என்றே பெயரிட்டுள்ளனர். ஹெலிபேட் உள்ளிட்ட சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
செய்தியின் தொடர்ச்சிக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

வடிவம்
162 நீளம் கொண்ட இந்த படகின் கூம்பு வடிவில் 200 அடி உயரம் கொண்டது. இந்த படகு 8 அடுக்குகளை கொண்டது. இதற்காக, 4 லிஃப்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

எல்இடி பேனல்கள்
இதன் ஜன்னல்கள் எல்இடி விளக்குகள் மூலம் மினுக்கிறது. இதனை நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பயணிகள்
இரவில் 36 பயணிகள் தங்குவதற்கான அறைகள் மற்றும் வசதிகள் உள்ளன. அதேநேரத்தில், விருந்து உபசரிப்பு அல்லது விழாக்களை நடத்தும்போது 200 பேர் வரை இருக்கலாம்.

வசதிகள்
சூட் அறைகள், ஹெலிபேட் மற்றும் நீருக்கடியிலான வாழ்வியலை பார்க்கும் வசதி கொண்ட அறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் ஓட்டல்
இதனை கோடீஸ்வரர்களுக்கான தனி பயன்பாடு கொண்டதோடு மட்டுமின்றி, மிதக்கும் ஓட்டலாகவும் பயன்படுத்த முடியும்.

வேகம்
அதிகபட்சமாக மணிக்கு 18 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்.

விலை
அரை பில்லியன் டாலர் விலை கொண்டதாக இந்த படகு விருப்பமுள்ளவர்களுக்கு கட்டமைத்து தரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








