கோடி ரூபாய் செலவு செய்து கார் வாங்கிட்டு நிற்க வைக்க இடம் இல்லை! பரபரப்பான நகரத்திற்குள் இப்படியொரு இடமா?

உலகளவில் விலையுயர்ந்த சொகுசு கார்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், சாதாரணமான கார்களை தாண்டி சமீப காலமாக விலையுயர்ந்த சொகுசு கார்களும் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் தென்பட ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக, செல்வந்தர்கள் பலர் ஓரிடத்தில் கூடும் இடங்களில் விலையுயர்ந்த கார்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை பார்க்க முடியும். அவ்வாறான, வசதி படைத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் ஒன்று, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகும். ஒட்டுமொத்த இந்தியாவின் உயரிய நீதிமன்றமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் வளாகம் அதற்கேற்ப பிரம்மாண்டமான பரப்பளவில் அமைந்துள்ளது.

supreme court parking space

நாட்டின் பல உயர்நீதிமன்றங்களை தாண்டி ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வருகிறது என்றாலே, அந்த வழக்கு ஆனது அந்த அளவிற்கு அதிக முக்கியமானதாக இருக்கும். அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களும் மிக உயரிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்களாக உள்ளனர். அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிப்பதால், அதற்கேற்ப வழக்கறிஞர்கள் பெறும் வருவாய்களும் அதிகமாக இருக்கின்றன.

இதனாலேயே பெரும்பாலான வழக்கறிஞர்கள் விலையுயர்ந்த சொகுசு கார்களில் உச்சநீதிமன்றத்துக்கு வருகின்றனர் என்பதை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இதைவிட நம் கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால், அத்தனை சொகுசு கார்களுக்கு மத்தியில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் ஒன்று இருப்பதாகும்.

supreme court parking space

வீடியோவில், சிவப்பு நிறத்திலான அந்த ஆல்டோ காரை மட்டும் நெருக்கமாக காட்டியுள்ளனர். பிரம்மாண்டமான சொகுசு கார்களுக்கு மத்தியில் அளவில் சிறியதான ஆல்டோ கார் மட்டும் தனித்து தெரிகிறது. இந்த வீடியோவில் காட்சித்தரும் சொகுசு கார்கள் அனைத்தும் நீதிபதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் உடையது மட்டுமே ஆகும். பொது மக்களுக்கான பார்க்கிங் பகுதி தனியாக உள்ளது.

நீதிபகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான பார்க்கிங் பகுதியில், சில கார்கள் மட்டும் மஞ்சள் நிற கோட்டினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதை வீடியோவில் காணலாம். இந்த ஸ்பெஷலான பார்க்கிங் பகுதி ஆனது நீதிபதிகளுக்கானதாக இருக்கலாம். இந்த ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் நம்மை கவர்ந்திழுப்பது, பிரம்மாண்டமான தோற்றத்தில் நிற்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) கார் ஆகும்.

ரூ.1.5 கோடி மதிப்பான இந்த 7-சீட்டர் பென்ஸ் காருக்கு பின்னால், அதே ஸ்பெஷல் பார்க்கிங் பகுதியில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover 110) கார் ஒன்று நிற்கிறது. ஆனால், அது டிஃபெண்டர் கார் என்பதை பார்த்தவுடனே கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனெனில், இந்த டிஃபெண்டர் 110 கார் அந்த அளவிற்கு வெகுவாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அதாவது, உரிமையாளர் அந்த காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்த கார்களை தொடர்ந்து, வீடியோவில் ஆடி (Audi), ரேஞ்ச் ரோவர் (Range Rovers) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) போன்ற பல விலையுயர்ந்த கார்களை பார்க்க முடிகிறது. அவற்றுள் ஒன்று, மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் (Mercedes-Maybach S-Class) கார் ஆகும். இந்த காருக்கு அருகில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class) என்கிற லக்சரி செடான் ரக கார் நிற்பதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அத்தனை சொகுசு கார்களுக்கு மத்தியில் மாருதி சுஸுகி ஆல்டோ கார் மட்டும் தனியாக மற்றும் ஸ்பெஷலானதாக தெரிகிறது. இதனாலேயே இந்த சிவப்பு நிறத்திலான ஆல்டோ காரை 'லார்ட் கார்' (Lord Car) என கூறுகின்றனர். அதாவது, நீதிபதியின் கார் என கிண்டலாக இணையத்தில் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 13:59 [IST]
English summary
Supreme court parking space filled with luxury cars of lawyers
மேலும்... #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+