பொது போக்குவரத்தில் சோலார் எலெக்ட்ரிக் பஸ்ஸா! சூரிய ஒளி இருந்தாலே போதுமாச்சே.. ஃப்ரீயா சர்வீஸ் பண்ண போறாங்களா!
காற்று மாசு, எரிபொருளுக்கு ஆகும் அதிக செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் சில பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. அந்தவகையில், பொது போக்குவரத்து துறையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்படுத்தி வரும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருக்கின்றது. சமீபத்தில் சூரத் நகரத்திலேயே எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. இந்த பேருந்துகளைச் சார்ஜ் செய்ய வழக்கமான மின்சார இணைப்பைக் கொண்ட சார்ஜிங் மையங்களே பயன்படுத்தி வரப்பட்டது.
இதற்கு மாற்றாகவே தற்போது சோலார் சிஸ்டத்தை சூரத் நகராட்சி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 100KW திறன் கொண்ட சோலார் சிஸ்டமே தற்போது அரசு பொதுப் போக்குவரத்து எலெக்ட்ரிக் பேருந்துகளைச் சார்ஜ் செய்யும் விதமாக தயார் செய்து இருக்கின்றனர்.

இதுவே அரசு பேருந்துகளுக்காக சோலார் எனெர்ஜி சிஸ்டம் தயார் செய்யப்படுவது முதல் முறையாகும். ஒட்டுமொத்த இந்தியாவுலேயேும் இதுவே முதல் முறையாகும். நிரந்தரமான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இந்த வேலையை சூரத் நகராட்சி பார்த்திருக்கின்றது. அல்தான் பேருந்து பணிமனையிலேயே சோலார் எனெர்ஜி சிஸ்டம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி நகரத்தில் 400 எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனை 1,000 யூனிட்டுகளாக உயர்த்த நகராட்சி திட்டமிட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சோலார் சார்ஜிங் வசதி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக மின்சாரத்திற்கு ஆகும் செலவும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.
சோலார் வாயிலாக கிடைக்கும் மின்சாரத்தை சேகரிக்க மிகப் பெரிய பேட்டரி பேக்-அப் செட்-அப் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பகல் முழுக்க கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரிகள் வாயிலாக சேகரித்து அவற்றை இரவு நேரங்களில் பேருந்துகளை சார்ஜ் செய்ய பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கின்றது.
பொதுவாக, சோலார் பேனலைக் கொண்டு பகலில் மட்டுமே மின்சாரம் தயாரிக்க முடியும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், சூரிய ஒளி இருந்தால் மட்டுமே சோலார் பேனல்கள் மின்சாரத்தை தயாரிக்கும். சூழல் இம்மாதிரியாக இருக்க பேருந்துகளோ பகலில் பொதுப் பயன்பாட்டிற்குச் சென்றுவிடும்.
எனவேதான் பெரிய பேட்டரி பேக்-அப் செட்-அப் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக பகல் முழுக்க மின்சாரத்தை சேகரித்துவிட்டு, இரவு நேரங்களில் பேருந்துகள் வந்த பின்னர் அதை சார்ஜ் செய்துக் கொள்வர். ஆகையால், மின்சார பேருந்துகள் தடையின்றி பயன்பாட்டில் இருக்கும்.
பேருந்துகளை டீசல் அல்லது பிற எரிபொருளில் இயக்கி வந்த நிலையில், இப்போது அரசுகள் மின்சாரத்தில் இயக்கத் தொடங்கி இருக்கின்றனர். தமிழகத்தில் கூட இந்த பணிகள் தொடங்கி இருக்கின்றன. அரசு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
ஆனால், இப்போது டீசலில் இயங்கும் பேருந்துகளே மாநிலத்தில் மிக அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றுடன், தற்போது சிஎன்ஜியில் இயங்கும் பேருந்துகளை இணைக்கும் பணிகளையும் தமிழக அரசு கையில் எடுத்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே தனித்துவமாக பேருந்துகளை சோலார் வாயிலாக சார்ஜ் செய்யும் முயற்சியில் குஜராத்தின் சூரத் நகராட்சி களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. காற்று மாசுபாட்டை குறைக்க, அதிக லாபத்தைப் பெற என பலநிலைகளில் மின்சார வாகனங்கள் உதவியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே மாநில அரசுகளும் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








