இந்த பணக்காரங்க ஏன்தான் இப்படி பண்ணுறாங்களோ.. லட்ச ரூபாவே மிச்சப்படுத்த நினைச்சவருக்கு கிடைத்த பரிசு இதுதான்!
அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை தவிர்க்க மக்கள் ஒரு சிலர் தவறான வழிகளைக் கையாள்கின்றனர். தவறான வருமான சான்று மற்றும் போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சமர்பித்து வரி செலுத்துவதில் இருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு அபராதம் அதிகம் என தெரிந்தும், முறைகேடுகளில் ஈடுபட்டு வரி ஏய்ப்பை ஒரு சிலர் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுமட்டுமா வாகனங்களை வாங்குவதிலும் ஒரு சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர். இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்ட பெரும் செல்வந்தர் ஒருவருக்கே தரமான பாடத்தைப் புகட்டி இருக்கின்றனர் காவல்துறையினர். குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் ஒருவர், முறையான ஆவணங்கள் இன்றி காரை சாலையில் இயக்கியதாகக் கூறி அக்காரை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

போர்ஷே 718 கேமேன் ஸ்போர்ட்ஸ் காரையே காவல்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சமீபத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையிலேயே இந்த கார் சிக்கியிருக்கின்றது. அப்போது செய்யப்பட்ட ஆய்வில் சொகுசு காருக்கான ஆவணங்கள் பல இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே அந்த அரிய வகை ஸ்போர்ட்ஸ் காரை சூரத் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
முன்னதாக அந்த கார் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இருக்கின்றன. அப்போது ஆவணங்களை சமர்பிக்க அந்த காரின் உரிமையாளர் தவறியிருக்கின்றார். அதேவேளையில், ஆவணங்களை சமர்பிக்க அந்த சூப்பர் கார் உரிமையாளருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இருப்பினும், அதை சமர்பிக்க அதன் உரிமையாளர் தவறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிராண்ட் நியூ போர்ஷே கேமேன் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ. 1.48 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இவ்வளவு மாபெரும் தொகையைச் செலுத்தி காரை வாங்கிய அந்த தொழிலதிபர் சில லட்சங்களை மிச்சப்படுத்தும் நோக்கில், குறிப்பிட்ட ஆவணங்களை வாங்காமல் விட்டிருக்கின்றார்.
ஆனால், தற்போது காரையே அவர் இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் சூப்பர் கார் சூரத்தைச் சேர்ந்த நிகில் பிரஜபதி எனும் தொழிலதிபருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இந்த காரை சில தினங்களுக்கு முன்னரே தனது சகோதரன் எடுத்து வந்ததாகவும், இதற்கான ஆவணங்களை திரட்டும் பணிகளை இப்போதே தாங்கள் தொடங்கியிருப்பதாக, போலீஸிடம் அவர்களது கார் சிக்கிய பின்னர் கூறி சமாளிக்கத் தொடங்கி இருக்கின்றார்.

மேலும், விரைவில் உரிமம் பரிமாற்றும் பணிகள் தொடங்கப்படும் என்றும் சூப்பர் கார் உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட தொகை அபராதம் வசூலிக்கப்பட்டு பின்னர் அக்கார் உரிமையாளரிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
உரிய ஆவணம் வாகனங்கள் சாலையில் இயங்கக் கூடாது என்பது முக்கிய விதியாகும். 2015, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 50இன் படி, நம்பர் பிளேட் சீராக இருத்தல் வேண்டும், முறையான ஆவணங்களைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். ஆனால், இந்த போர்ஷே காரில் பதிவெண் இல்லை, மேலும், முறையான ஆவணங்களும் இல்லை.
இருப்பினும், சாலையில் அந்த வாகனம் நடமாடி இருக்கின்றது. அத்துடன், போக்குவரத்து விதிமீறல் சிலவற்றிலும் அது ஈடுபட்டு இருக்கின்றது. இதன் விளைவாகவே தற்போது அந்த கார் போலீஸ் கஸ்டடியில் சிக்கி இருக்கின்றது. போர்ஷே 718 கேமேன் கார் ஓர் அதிக திறனை வெளிப்படுத்தும் வசதிக் கொண்ட சூப்பர் கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போர்ஷே 718 கேமேன் சூப்பர் காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 295 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 293 கிமீ ஆகும். மேலும், வெறும் 5.1 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து இந்த காரால் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









