இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா ஊரடங்கில் பொழுதை கழிக்கும் விதமாக தனது விலையுயர்ந்த ஃபோர்டு மஸ்டங் காரை கழுவி சுத்தம் செய்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இதுகுறித்த வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் நம் அனைவரையும் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது. சிலர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியினை மேற்கொண்டாலும், பலர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

ஒரு சிலருக்கு வீட்டிற்குள் எவ்வாறு பொழுதை கழிப்பது என்ற கவலை. குறிப்பாக எந்நேரமும் வெளியே பிசியாக சுற்றி கொண்டிருந்தவர்கள் தற்போது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க வீட்டிற்குள்ளயே பிசி ஆக பலர் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

இந்த வகையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னிடம் உள்ள ஃபோர்டு மஸ்டங் போன்ற விலையுயர்ந்த கார்களை தானே கழுவி சுத்தம் செய்துள்ளார். மஹிந்திர சிங் தோனியை போன்று ரெய்னாவும் மிகுந்த வாகன பிரியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் தமிழக செல்ல பிள்ளையாக சின்ன தல என அன்போடு அழைக்கப்பட்டு வரும் ரெய்னாவிடம் சிஎஸ்கே ஜெர்ஸியின் மஞ்சள் நிறத்தில் ஃபோர்டு மஸ்டங் கார் உள்ளது. இதனை சுத்தம் செய்யும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சுத்தம் செய்யும் போதும் ரெய்னா சிஎஸ்கே ஜெர்ஸியை அணிந்திருப்பது தான். இது நேரடியாக தமிழக மக்களை கவர்ந்துவிட்டது. இவரிடம் உள்ள ஃபோர்டு மஸ்டங் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காராகும்.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.74 லட்சம் என்ற அளவிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் 0-வில் இருந்து 60 kmph என்ற வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. இதற்கு நார்மல், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் ஸ்னோ என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி கொண்ட 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒலி பெருக்கியுடன் 9 ஸ்பீக்கர்கள், அதி தீவிரமான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் உள்பட ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்போர்ட்ஸ் கார் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் எல்லாம் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளதா...? இணையத்தில் வைரலாகும் வீடியோ...

ஃபோர்டு மஸ்டங் மாடலில் வழங்கப்பட்டு வரும் 5.0 லிட்டர் Ti-VCT வி8 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 401 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கக்கூடியது. இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் அமைப்பின் மூலமாகவே மஸ்டங் கார் உலகம் முழுவதும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Suresh Raina Washing His Ford Mustang
Story first published: Wednesday, July 22, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X