மனைவிக்காக எல்லா வேலையையும் விட்டுட்டு வந்த பிரபல நடிகர்! பச்சை நம்பர் பிளேட் காரில் மாஸ் எண்ட்ரீ

சூர்யா- ஜோதிகா (Surya- Jyothika), பிரபலமான தமிழ் திரையுலக தம்பதி என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான நட்சத்திர ஜோடி. இந்த நிலையில், நடிகை ஜோதிகா நடித்த இந்தி வெப் சீரிஸ் (Web Series) படத்தை சூர்யா குடும்பத்தினர் நேரில் மும்பையில் உள்ள தியேட்டருக்கு வந்து கண்டுகளித்துள்ளனர். தியேட்டருக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் (BMW Electric Car)-இல் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதி வந்திறங்கியது, சுற்றியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும், அந்த எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

நடிகைகள் சோபனா அஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே மற்றும் அஞ்சலி ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ், 'டப்பா கார்டெல்' (Dabba Cartel) ஆகும். கடந்த பிப்.25ஆம் தேதி இந்த வெப் சீரிஸின் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில், பிப்.28ஆம் தேதி வெள்ளி கிழமையில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix)-இல் வெப் சீரிஸின் முதல் பாகம் வெளியிடப்பட உள்ளது.

suriya- jyothika arrived in bmw

இதற்கிடையில், இன்று (பிப்.27) டப்பா கார்டெல் வெப் சீரிஸின் சிறப்பு காட்சி மும்பையில் ஒரு திரையரங்கில் படக்குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த சிறப்பு காட்சியில், டப்பா கார்டெல் வெப் சீரிஸில் நடித்த நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தினர் உடன் கலந்துக் கொண்டு ஜாலியாக பார்த்தனர்.

அந்த வகையில், இந்த வெப் சீரிஸில் நடித்த நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யா மற்றும் மகன் & மகள் உடன் திரையரங்கிற்கு வந்தார். நடிகர் சூர்யாவின் குடும்பம் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான பிஎம்டபிள்யூ ஐ7 (i7)-இல் திரையரங்கிற்கு வருகை தந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

suriya- jyothika arrived in bmw

பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட பிஎம்டபிள்யூ ஐ7 காரில் திரையரங்கிற்கு வந்த நடிகர் சூர்யா குடும்பத்தினர், காரில் இருந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த போட்டோகிராபர்களுக்கு சில பல போஸ்களை கொடுத்துவிட்டு திரையரங்கிற்குள் நுழைவதை வீடியோவில் காணலாம். நடிகர் சூர்யாவின் குடும்பம் வந்த பிஎம்டபிள்யூ ஐ7 கார் ஆனது சில்வர் மற்றும் வெள்ளை என ட்யூயல்-டோன் நிறத்தில் உள்ளது.

இந்த கலர் ஆப்ஷனை 'இண்டிவிட்யூவல் டிராவிட் கிரே மெட்டாலிக்' என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், இன்னும் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த ஐ7 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இ-டிரைவ்50 எம் ஸ்போர்ட், எக்ஸ்-டிரைவ்60 எம் ஸ்போர்ட் மற்றும் எம்70 எக்ஸ்-டிரைவ் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

suriya- jyothika arrived in bmw

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் முறையே ரூ.2.03 கோடி, ரூ.2.13 கோடி மற்றும் ரூ.2.50 கோடி என உள்ளன. இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரில் 101.7kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி ஆனது வேரியண்ட்டை பொறுத்து அதிகப்பட்சமாக 625கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரின் எந்த வேரியண்ட்டை நடிகர் சூர்யாவின் குடும்பம் வைத்துள்ளது என்பது தெரியவில்லை. உண்மையில் இது நடிகர் சூர்யாவின் சொந்தமான காரா என்பதே முதலில் உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், படக்குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட காராக கூட இது இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 22:07 [IST]
English summary
Suriya jyothika arrived in bmw i7 electric car at dabba cartel screening
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X