சென்னைல இப்படி ஒரு நிறுவனமா! பணத்த சேர்த்து வைக்க தெரியாத ஓனரா இருப்பாருபோல! கார்-பைக்னு வாரி வழங்கியிருக்காரு

ஆயிரம், ரெண்டாயிரம் போனஸை தருவதற்கே அழுகின்ற ஓனர்கள் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை பரிசாக வழங்கி மகிழ்வித்து இருக்கின்றது. பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் நம்ம சென்னையிலேயே அரங்கேறியிருக்கின்றது. முன்பெல்லாம் இந்தியாவின் ஏதோ ஓர் மூலையில் அரங்கேறி வந்த இந்த மாதிரியான நிகழ்வு தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற தொடங்கி இருக்கின்றது.

குறிப்பாக, தமிழகத்தில் நிறைய இந்த மாதிரியாந வாகன கிஃப்ட் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையிலேயே சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் செல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை சமீபத்தில் பரிசாக வழங்கி இருக்கின்றது.

Surmount logistics gifts vehicles to employees

ஊழியர்களின் கடின உழைப்புக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்த வாகன பரிசளிப்பை தனியார் நிறுவனம் அரங்கேற்றி இருக்கின்றது. பரிசாக டாடா கார் (Tata Car), ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் (Honda Activa Scooter) மற்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக் ஆகியவையே வழங்கப்பட்டு இருக்கின்றன.

மொத்தமாக 20 பேருக்கு வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. டாடா-வின் அதிகம் பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடல்களில் ஒன்றான டியாகா (Tiago)-வோ பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடலே டியாகோ ஆகும்.

Surmount logistics gifts honda activa to employees

படங்களை வைத்து பார்க்கையில் அது ஆரம்ப நிலை தேர்வு என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 5 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. இதேபோல், ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) பைக்கும் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ. 1.98 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. நிறைய பேர் பரிசாக பெற்ற வாகனமாக இதுவே இருக்கின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 76 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

ஊழியர்களின் நிலையைப் பொருத்து கார், பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ஓர் நிறுவனம் 28 கார் மற்றும் 29 டூ-வீலர்களைப் பரிசாக வழங்கிய சம்பவம் அரங்கேறியது. இதுமட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்தியாவின் இன்னும் பிற மாநிலங்களில் இந்த மாதிரியான சம்பவம் கடந்த தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் அரங்கேறின.

இந்த நிலையிலேயே புத்தாண்டை புதிய வாகனங்களுடன் தன்னுடைய ஊழியர்கள் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில் சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் செல்யூசன்ஸ் நிறுவனம் வாகனங்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்த நிகழ்வு மற்ற தனியார் நிறுவன ஊழியர்களை பொறாமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஊழியர்களின் உழைப்பை எப்படி சுரண்டலாம் என பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு முதலாளியா என்றே பலரையும் இந்த வாகன பரிசளிப்பு சம்பவம் கேட்கச் செய்திருக்கின்றது. குறிப்பாக, 'சமூக வலைதளங்களில் சிலர் இந்த நிறுவனத்தின் ஓனர் பணம் சேர்க்க தெரியாதவராக இருப்பார் போல' என அவருடைய நல்ல மனதைச் சுட்டுக் காட்டும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 24, 2024, 5:00 [IST]
English summary
Surmount logistics solutions rewards employees with tata car activa scooter royal enfield bike
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+