பஸ் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து மக்கள் பைக், கார்களில் பயணிக்க காரணம் இது தான்! திடுக்கிடும் சர்வே!

இந்தியாவில் போதுமான அளவு பொது போக்குவரத்து வசதி இல்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கர்நாடக மாநில அரசு பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆப் பாக துமாக் என்ற ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப் தற்போது ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி 2070 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கார்பன் வெளியேற்ற அதாவது மாசு வெளியேற்றம் இல்லாத உலகமாக மாற வேண்டும் என்ற நோக்கில் தற்போது பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

tummoc survey on public transport

இதற்கு பொது போக்குவரத்து என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மக்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணிப்பதை விட பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் மாசு ஏற்படுவது வெகுவாக குறையும். இப்படியாக மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது குறித்து என்ன நினைக்கிறார்கள் அவர்களுக்கான தேவை என்ன என்பதை குறித்து ஆய்வு நடத்த இந்நிறுவனம் மொத்தம் 21 முக்கிய நகரங்களில் சுமார் 50,000 பயணிகளிடம் ஆய்வுகளை நடத்தியது.

இந்த பயணிகளிடம் நான்கு முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்படி அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது அல்லது தவிர்ப்பது ஏன்? இதை மேம்படுத்த என்ன செய்யலாம்? பொது போக்குவரத்தை இவர்கள் பயன்படுத்த விருப்பமா? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு நான்கு விதமான முக்கிய பதில்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

tummoc survey on public transport

அதன்படி 37 சதவீதமான இந்தியர்கள் பொது போக்குவரத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். 28% மக்கள் பொது போக்குவரத்து வாகனங்கள் சரியான நேரத்தில் வருவதில்லை எனவும் அடிக்கடி நேரம் மாற்றம் மற்றும் காலதாமதம் ஏற்படுவதால் அதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக 24 சதவீத மக்கள் பொது போக்குவரத்து வாகனங்கள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதாகவும் இதனால் அதை தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 44% மக்கள் பொது போக்குவரத்து குறித்து தகவல்களை பெறுவது சிரமமாக இருப்பதாகவும் டிஜிட்டல் தளத்தில் இது குறித்த எந்த தகவலும் ரியல் டைமில் இல்லை எனவும் இதனால் இதை தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

tummoc survey on public transport

இந்த விஷயம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது பொது போக்குவரத்தை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து ஒருவர் பல ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும். இப்படியாகத்தான் எத்தனை நபர்கள் குறிப்பிட்ட ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார்கள் என்பதை பொறுத்து இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சர்வேயில் கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

49சதவீதமான மக்கள் பொது போக்குவரத்தில் கேஷ்லெஸ் பேமென்ட் வசதி வேண்டும் என கேட்கிறார்கள். 38சதவீதமான மக்கள் பொது போக்குவரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உட்பகுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். 22சதவீதமான மக்கள் பொது போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாகவும். இதனால் இதை நம்ப முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 15சதவீதமான மக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே பொது போக்குவரத்து வாகனங்கள் இருப்பதாகவும். இதனால் இதை பயன்படுத்துவது சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே முடிவில் 78 சதவீதமான மக்கள் பொது போக்குவரத்தின் முக்கியம் குறித்து தங்களுக்கு புரிவதாக தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதில் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக அதை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். முக்கியமாக கூட்ட நெருக்கடி மற்றும் பொது போக்குவரத்து குறித்த சரியான ரியல் டைம் தகவல்கள் ஆகியவற்றை கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது போக்குவரத்தை விட தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது அதிக செலவு ஏற்படுத்தும் விஷயம் தான். இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள முக்கியமான காரணம் பொதுப் போக்குவரத்தில் இருக்கும் பிரச்சனைகள் தான். இதை சரி செய்ய அரசு பொது போக்குவரத்தில் பல்வேறு முக்கிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வர வேண்டும். இதனால் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

Article Published On: Friday, October 20, 2023, 12:14 [IST]
English summary
Survey reveals most urban commuters see public transport as inadequate and inaccessible
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X