சோனியா சோனியா பாட்டு சுஷ்மிதா சென்னா இது! 28 வருஷத்துல அடையாளமே தெரியாத அளவு மாறீட்டாங்க! 40 லட்ச ரூபா காரில்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளிட்ட கார்கள் உடன் போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் ஆரம்ப விலை 41.07 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 43.35 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை, திரையுலக நடிகைகள் பலரும் வைத்துள்ளனர்.

இதில், ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh) மற்றும் சன்னி லியோன் (Sunny Leone) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்த வரிசையில் பிரபல நடிகையான சுஷ்மிதா சென்னிடமும் (Sushmita Sen) எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் உள்ளது. இவர் கடந்த 1997ம் ஆண்டு நாகார்ஜூனா (Nagarjuna) நடிப்பில் வெளியான ரட்சகன் திரைப்படத்தின் மூலம், தமிழ் மக்கள் இடையே மிகவும் பிரபலமான நடிகையாக மாறியவர் ஆவார்.
அந்த படத்தில் இடம்பெற்ற சோனியா... சோனியா... பாடல் இன்று வரை தமிழ் மக்களிடையே பிரபலம். கூலி (Coolie) திரைப்படத்தில் வரும் நாகார்ஜூனா தொடர்பான காட்சிகள் உடன், சோனியா... சோனியா பாடல் ஒலிக்கும் ரீல்ஸ்கள், கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ரட்சகன் திரைப்படத்தை பலரும் நினைவு கூர்ந்து வரும் நிலையில், அந்த திரைப்படத்தில் நடித்த சுஷ்மிதா சென்னின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Instant Bollywood இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில் இருந்து, சுஷ்மிதா சென் இறங்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில் வெளியிடங்களுக்கு சுஷ்மிதா சென் வந்திருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் பல முறை அவரை இதே எம்ஜி க்ளோஸ்ட்டர் காருடன் நம்மால் பார்க்க முடிந்துள்ளது.
சுஷ்மிதா சென் பயன்படுத்திய எம்ஜி க்ளோஸ்ட்டர் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில், 31.2 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12 ஸ்பீக்கர்கள் உடன் கூடிய ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.
அத்துடன் 20.32 செமீ மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 75க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகள், மசாஜ் வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை போன்ற அம்சங்களும், எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் எம்ஜி க்ளோஸ்ட்டர் கொண்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options), எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஷ்மிதா சென், சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். எம்ஜி க்ளோஸ்ட்டர் தவிர, பிஎம்டபிள்யூ எக்ஸ்6 (BMW X6), ஆடி க்யூ7 (Audi Q7), லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 (Lexus LX 470) மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே (Mercedes-AMG GLE 53 Coupe) போன்ற கார்களையும், சுஷ்மிதா சென் வைத்திருப்பதே இதற்கு சாட்சி.


Click it and Unblock the Notifications








