எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க

எஸ்யூவி காரை வாங்குவதா? அல்லது செடான் காரை வாங்குவதா? என்ற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறோம்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

வாகன சந்தையில் எஸ்யூவி மற்றும் செடான் என இரண்டு ரகத்தை சேர்ந்த கார்களுமே மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் எஸ்யூவி ரக காரை வாங்குவதா? அல்லது செடான் ரக காரை வாங்குவதா? என்ற குழப்பம் சில சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை சமீப காலமாக வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி கார்களை நோக்கி திரும்பியுள்ளது.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

மறுபக்கம் செடான் கார்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. ஏனெனில் மழைக்காலங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறும் மும்பை போன்ற நகரங்களுக்கு எஸ்யூவி கார்கள்தான் ஏற்றவை. இன்ஜின் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுவதால், எஸ்யூவி கார்கள் எத்தகைய சாலைகளையும் எதிர்கொள்ள கூடியவை.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

மறுபக்கம் செடான் கார்களின் செயல்திறன் மற்றும் கையாளுமை நன்றாக இருக்கும் என்பதுடன், பயணிகள் தாராளமான இடவசதியையும் பெறலாம். தினசரி பயன்பாட்டிற்கும், சவால்கள் இல்லாத சாலைகளில் ஓட்டுவதற்கும் செடான் கார்கள் சிறந்தவை. ஹேட்ச்பேக் ரக கார்களில் இருந்து மாறுபவர்களின் முதன்மையான தேர்வாக செடான் ரக கார்கள் உள்ளன.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், எஸ்யூவி மற்றும் செடான் ஆகிய இரண்டு வகையை சேர்ந்த கார்களிலும் சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. ஆனால் எப்படியாயினும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற காரைதான் நீங்கள் வாங்க வேண்டும். எஸ்யூவி மற்றும் செடான் கார்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறிய இந்த செய்தி உங்களுக்கு உதவும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

விலை:

பொதுவாக செடான் கார்களை விட எஸ்யூவி கார்கள் விலை உயர்ந்தவை. எஸ்யூவி கார்களில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுவதுதான் அவை விலை உயர்ந்தவையாக இருப்பதற்கு காரணம். உதாரணத்திற்கு ஆல் வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் வசதி இருந்தால், அந்த எஸ்யூவி கார் விலை உயர்ந்ததாக இருக்கும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

ஆனால் செடான் கார்கள் பொதுவாக 2 வீல் டிரைவ் வசதியுடன்தான் வருகின்றன. உங்கள் பட்ஜெட் டைட்-ஆக இருந்தால், செடான் கார்கள்தான் ஏற்றவை. பட்ஜெட் பற்றிய கவலை இல்லை என்றால், நீங்கள் எஸ்யூவி ரக கார்களை வாங்குவதை பற்றி பரிசீலனை செய்யலாம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி கார்களைதான் நிறைய பேர் வாங்கி கொண்டுள்ளனர்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

எஸ்யூவி ரக கார்களை விட செடான் ரக கார்கள் விலை குறைந்தவை என்பதால், அவற்றை நீங்கள் தேர்வு செய்யும்பட்சத்தில் கொஞ்சம் பணத்தை சேமிக்க முடியும். அல்லது நவீன வசதிகளுடன் கூடிய டாப் வேரியண்ட்களை வாங்கலாம். ஆரம்ப நிலை வேரியண்ட்களை காட்டிலும் டாப் வேரியண்ட்கள் சிறந்தவையாக இருக்கும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

பரிமாணங்கள்:

பொதுவாக செடான் கார்களை விட எஸ்யூவி கார்கள் உயரமானவை. இதன் காரணமாக அவை விசாலமான இடவசதியை பெற்றிருக்கும். லக்கேஜ் வைப்பற்கு அதிக இடவசதி தேவைப்பட்டால் நீங்கள் பின் வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள முடியும். மேலும் எஸ்யூவி கார்களின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் சிறப்பானதாக இருக்கும் என்பதால், எத்தகைய சாலைகளிலும் பயணிக்க முடியும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

அதே நேரத்தில் செடான் ரக கார்கள் என்றால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காரின் அன்டர்பாடி அடிபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எப்படி பார்த்தாலும் செடான் கார்களை விட எஸ்யூவி கார்களின் பரிமாணங்கள் பெரியது. அத்துடன் எஸ்யூவியை ஓட்டும்போது முன்னால் உள்ள சாலையை நன்றாக பார்க்க முடியும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

பார்க்கிங்:

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி எஸ்யூவி கார்கள் அளவிற்கு செடான் கார்கள் பெரிதானவை கிடையாது. இதனை ஒரு சிலர் குறைபாடாக கருதலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு சிறிய கார்கள்தான் சிறந்தவை. அத்துடன் சிறிய கார்களை பார்க்கிங் செய்வதும் எளிது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

மைலேஜ்:

மைலேஜை பொறுத்தவரை எஸ்யூவி கார்களை விட செடான் ரக கார்கள் சிறந்தவை. பாடியின் நீளம் மற்றும் உயரம் ஆகிய இரண்டு அம்சங்களிலும் எஸ்யூவி கார்களை விட செடான் கார்கள் சிறியவை என்பதுதான் இதற்கு காரணம். மேலும் எஸ்யூவி கார்களை விட செடான் கார்களின் எடை குறைவு என்பதும், அவற்றின் மைலேஜ் சிறப்பானதாக இருக்க ஒரு காரணம்.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

பயணிகள் எண்ணிக்கை:

உங்களது குடும்பம் பெரியது என்றால், செடான் ரக கார்கள் உங்களுக்கு ஏற்றவை கிடையாது. அதே சமயம் உங்களுக்கு எஸ்யூவி கார்கள் மிகவும் சிறந்தவையாக இருக்கும். ஏனெனில் எஸ்யூவி கார்களில் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்திய சந்தையில் தற்போது நிறைய 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் கிடைக்கின்றன.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

பெரும்பாலானோரின் விருப்பம்:

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் பெரும்பாலானோர் எஸ்யூவி கார்களைதான் தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மறுபக்கம் செடான் கார்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. கார் நிறுவனங்கள் செடானை விட எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதில்தான் ஆர்வமாக உள்ளன.

எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

இந்தியாவில் பிரபலமாக உள்ள எஸ்யூவி கார்கள்

 • ஹூண்டாய் வெனியூ
 • ஹூண்டாய் கிரெட்டா
 • கியா சொனெட்
 • கியா செல்டோஸ்
 • டாடா நெக்ஸான்
 • டாடா ஹாரியர்
 • மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
 • எம்ஜி ஹெக்டர்
 • டொயோட்டா பார்ச்சூனர்
 • எஸ்யூவி அல்லது செடான்... உங்களுக்கு ஏற்ற கார் எது தெரியுமா? குழப்பத்திற்கு இப்பவே முற்றுப்புள்ளி வெச்சிடுங்க...

  இந்தியாவில் பிரபலமாக உள்ள செடான் கார்கள்

  • மாருதி சுஸுகி டிசையர்
  • ஹூண்டாய் அவ்ரா
  • ஹூண்டாய் வெர்னா
  • ஹோண்டா சிட்டி
Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
SUV vs Sedan: Here’s Everything You Need To Know. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X