உயிர் காக்கும் உன்னத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

சுஸுகி எர்டிகா காரை நவீன ஆம்புலன்ஸாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் காக்கும் உண்ணத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

சுஸுகி நிறுவனம் எர்டிகா மாடல் காரை கடந்த 2018ம் ஆண்டு இந்தோனஷியாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இந்த புதிய எர்டிகா காரானது மாருதி பலேனோ, இக்னிஸ், டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகியின் புதிய ஹார்ட்டெக் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது.

உயிர் காக்கும் உண்ணத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

இதனால், இந்த கார் முந்தைய மாடலைவிட எடை குறைவாகவும், அதிக உறுதியுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எர்டிகா கார் ஜிஏ, ஜிஎல், ஜிஎக்ஸ், மற்றும் ஜிஎக்ஸ் இஎஸ்பி ஆகிய கிரேட்களில் கிடைக்கின்றது. 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேலும், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடுன், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் உண்ணத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

இந்த நிலையில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுஸுகி டீலர், இந்த புதிய எர்டிகா காரை ஆம்புலன்ஸாக மாற்றி வடிவமைத்துள்ளார். இதற்காக, அந்த காரின் இண்டீரியரை முழுமையாக மாற்றம் செய்து பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். மேலும், காரின் மேற்புறத்தில் ஆம்புலன்ஸுக்கு உண்டான எச்சரிக்கை மின் விளக்கு, காரின் உட்புறத்தில் முதல் உதவிக்கு தேவையான சிலிண்டர், ஸ்டிரெட்சர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

உயிர் காக்கும் உண்ணத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

ஆனால், காரின் முன்பக்க கேபினெட் மட்டும் எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியே நிறுவப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக கண்ட்ரோல் பேனல் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், வார்னிங் லைட், சைரன் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தலாம். முழுமையாக ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ள எர்டிகாவில் ஆம்புலன்ஸ் டிரைவர், ஒரு உதவியாளர், நோயாளி மற்றும் நோயாளியின் உதவியாளர் என நான்கு பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் உண்ணத பணியில் இணைந்த சுஸுகி எர்டிகா கார்: பொதுமக்கள் வரவேற்பு...!

பெரிய ரக ஆம்புலன்ஸைக் காட்டிலும், கார்கள் வேகமாகவும், சிறிய தெருக்களில் சென்று சேவை செய்யும். இதன்காரணமாக, காரை ஆம்புலன்ஸ் சேவையில் பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற சேவையில் மாருதியின் ஆம்னி வேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது புதிய பரிணாமமாக எர்டிகா கார் இந்த உண்ணத பணியில் பயன்படுத்த உள்ளது.

புதிய மாருதி எர்டிகா கார் மஹிந்திராவின் மராஸ்ஸோ மற்றும் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்டது. மேலும், இது ரூ.7.44 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Source: Suzuki Riau

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2019, 18:10 [IST]
English summary
Suzuki Ertiga Turns Like A Ambulance - Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+