சுஸூகியின் பறக்கும் கார் விரைவில் வரப்போகுது! விலை என்ன இருக்கும் தெரியுமா?
சர்வதேச அளவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சுஸூகி நிறுவனம் தற்போது பறக்கும் கார்களை தயாரிக்கும் முடிவில் இறங்கியுள்ளது. இதன்படி இந்நிறுவனம் முழுவதுமாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் பறக்கும் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த பறக்கும் கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி இந்த பெயரை கேட்காதவர்களை இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தான் சுஸூகி இந்நிறுவனம் இந்தியாவில் மாருதி என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மாருதி சுஸூகி என்ற மிகப்பெரிய நிறுவனமாக மாறி இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் இந்த மாருதி சுஸூகி தான். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பலரின் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றன. முக்கியமாக குறைந்த விலைக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்வதால் மிக அதிகமான எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் சுஸூகி நிறுவனம் தற்போது சாலையில் ஓடும் கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து தற்போது தகவல்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. அதன்படி சுஸூகி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஏர் காப்படர் என்ற பெயரில் புதிய பறக்கும் கார் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது தற்போது பயன்பாட்டில் உள்ள டுரோன் வகையை விட சற்று பெரியதாகவும் அதே நேரம் தற்போது உள்ள ஹெலிகாப்டரை விட சற்று சிறியதாகவும் இருக்கும் படி வடிவமைக்கப்படுகிறது. இதில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். குறைந்தபட்சம் மூன்று பேராவது இதில் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இது உருவாக்கப்படுகிறது.
புதுமையான போக்குவரத்து வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சுஸூகி நிறுவனம் இந்த பறக்கும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த பறக்கும் ஏர் காப்படர் வாகனம் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெதுமெதுவாக இது இந்தியாவிலும் அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் இந்த பறக்கும் கார்கள் பெரும்பாலும் டாக்ஸி முறையிலான பயணங்களிலேயே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சொந்தமாக யாரும் வாங்க முடியாது. அந்நிறுவனங்கள் நடத்தும் இந்த சேவையில் பொதுமக்கள் பணம் கட்டி பயணம் செய்ய முடியும் என்ற வகையில் தான் இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தற்போது இந்தியாவில் உள்ள டிஜிசிஏ அமைப்புடன் சுஸூகி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிறுவனத்தின் துணை மேலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பொருளாதாரச் சிக்கல் காரணமாக இதை தனி நபர்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு சுஸூகி நிறுவனமே நேரடியாக இந்த சேவையை வழங்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக நிறுவனம் இந்தியாவில் மார்க்கெட் ரிசர்ச் ஒன்றை செய்து வருகிறது. அதன் மூலம் இந்தியாவில் இப்படியான பறக்கும் வாகனங்களை தயார் செய்து வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுடன் இணைந்து சுமார் 1.4 டன் கொண்ட இந்த ஏர் காப்டரை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த ஏர் காப்டர் என்பது ஒவ்வொரு வீட்டு மாடியிலும் தரையிறங்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெருநகரங்களில் இந்த ஏர் காப்டரின் பயன்பாடு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் இது முதல் கட்டமாக பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனம் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது என்றால் அது நிச்சயம் இந்தியர்களுக்கு பிடித்த வாரியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவரை அந்நிறுவனம் தயாரித்த அனைத்து தயாரிப்புகளும் அப்படியாக தான் இருந்துள்ளன. இப்படியாக இந்த ஏர் காப்டர் என்ற பறக்கும் காரும் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









