பெட்ரோலுக்கு கூட காசு மிஞ்சாதே... சொமாட்டோ சிஇஓ-விடம் இந்த பைக் இருக்குமா என்பது கூட சந்தேகம் தான்!!

ஸ்விகி, சொமாட்டோ டெலிவிரி பாய் வேலை இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரது அத்தியாவசியமான வருவாய்க்கு காரணமாக உள்ளது. ஒரு சிலர் மணிக்கணக்கில் கூட உணவு டெலிவிரிக்காக பைக்கில் சுற்றுக்கின்றனர். ஏனெனில், சிலருக்கு இது தொழில் என்பதை தாண்டி ஜாலியான பொழுதுப்போக்காக உள்ளது. பைக்கில் புது, புது இடங்களுக்கு செல்லலாம் என்பதற்காக, பெரிய, பெரிய வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவிரி பாயாக வேலையில் சேர்ந்துள்ளவர்களும் இருக்கின்றனர். அதேபோல், சிலர் தங்களது விலையுயர்ந்த பைக்குகளிலும் டெலிவிரி பாய் வேலையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டெலிவிரி பாய் வேலைகளில் பெரும்பாலும் விலை குறைவான, நன்கு மைலேஜ் தரக்கூடிய பைக்/ ஸ்கூட்டரை தான் பயன்படுத்துவர். ஏனெனில் அப்போதுதான் பெரிய தொகையில் வருவாயை பெற முடியும். ஆனால், வருவாயை பற்றி பெரியதாக கவலைப்படாமல், ஜாலிக்காக டெலிவிரி பாய் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்துகின்றனர்.

suzuki hayabusa for zomato delivery

அத்தகைய நபர்களை சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்பிலான தனது சுஸுகி ஹயபுஸா பைக் உடன் சொமாட்டோ டெலிவிரி பாய் போல் நடித்து ஒரு இளம்பெண்ணை கவர்ந்துள்ளார். இவர் உண்மையில் ஒரு யூடியூப்பர் ஆவார். சாலையில் செல்வோர் தனது ஹயபுஸா பைக்கை பார்த்ததும் கொடுக்கும் ரியாக்‌ஷன்களை காட்சிப்படுத்தி வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்தில், புதியதாக யோசித்து, சொமாட்டோ டெலிவிரி பாய் உடையில் உணவை டெலிவிரி செய்து அதன் மூலம் கவனத்தை பெற முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், உணவை ஆர்டர் செய்த பெண் இந்த நபரது சுஸுகி ஹயபுஸா பைக்கை பார்த்ததும் வாயடைத்து நின்றுள்ளார். பின்னர் தனக்கும் ஹயபுஸா பைக்கை ஓட்ட தெரியும் என கூறி, பைக்கில் அந்த பெண் அமரும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

suzuki hayabusa for zomato delivery

இதே ஹயபுஸா பைக் ஓனர் முன்னதாக இதேபோன்று ராபிடோ பைக் டாக்ஸி ரைடர் என்கிற பெயரில் பெண் ஒருவரை அவரது கல்லூரியில் கொண்டு சென்றுவிட்டார். அந்த வீடியோவையும் இவரது யூடியூப் சேனலில் காணலாம். இந்த நபர் வைத்திருப்பது, சுஸுகி ஹயபுஸா 25வது ஆனிவர்சரி எடிசன் ஆகும். அதாவது, ஹயபுஸா பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்த ஸ்பெஷல் எடிசன் கடந்த 2024 ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டது.

1998ஆம் ஆண்டில் முதல் சுஸுகி ஹயபுஸா பைக் ஜெர்மனியில் நடைபெற்ற இண்டர்மோட் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்சமயம், சுஸுகி ஹயபுஸா பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.95 லட்சம் ஆகும். அதுவே, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான 25வது ஆனிவர்சரி எடிசன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.70 லட்சம் ஆகும். ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வந்துவிடும்.

suzuki hayabusa for zomato delivery

சுஸுகி ஹயபுஸா 25வது ஆனிவர்சரி எடிசன் பைக்கில் தங்க நிறத்தில் செயின் டிரைவ் மற்றும் முன் சக்கரத்தில் உட்புறமாக சுழலக்கூடிய டிஸ்க் ரோட்டார்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் டேங்க் மற்றும் எக்ஸாஸ்ட் குழாயில் 25வது ஆனிவர்சரி எடிசன் லோகோ கூடுதலாக வழங்கப்படுகிறது. சுஸுகி ஹயபுஸாவில் 1340சிசி, இன்-லைன், 4-சிலிண்டர் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 142 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சுஸுகி இண்டெலிஜண்ட் ரைட் சிஸ்டத்துடன் ஹயபுஸா பைக் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் உருவாக்கப்படும் ஹயபுஸா பைக்கின் எடை 266 கிலோவாக உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 20 லிட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சுஸுகி ஹயபுஸா பைக் ஒனர் அவரது நண்பரின் சொமாட்டோ பதிவை உபயோகித்து உணவை டெலிவிரி செய்துள்ளார். அதாவது, வீடியோவிற்காக ஒருமுறை உணவை டெலிவிரி செய்து பார்த்துள்ளார். இருப்பினும், இந்த வீடியோ முழுவதும் நாடகமாக இருக்குமோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. ஏனெனில், பார்வையாளர்களை பெறுவதற்காகவும், சுவாரஸ்யமான வீடியோவிற்காகவும் சில யூடியூப்பர்கள் பொய்யாக நடந்துக் கொள்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 11:29 [IST]
English summary
Suzuki hayabusa for zomato delivery impressed everyone check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X