பறக்கும் காரின் உற்பத்தியை தொடங்கிய சுஸுகி.. ஸ்விப்ட் காரைபோல எல்லாரும் இத வாங்கி வானத்துல பறக்க போறாங்க!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான சுஸுகி (Suzuki) பறக்கும் கார் (Flying Car)-இன் உற்பத்தி பணிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு ஒரு நிறுவனத்துடன் உதவியுடன் இந்த பணிகளை அந்நிறுவனம் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சீக்கிரமே ஸ்விஃப்ட் காரில் பறப்பதைப் போல எல்லாரும் பறக்கும் காரை வாங்கி வானத்துல போறாங்க. இத்தகைய சூழலே இப்போது உருவாகி இருக்கின்றது. ஆமாங்க, உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான சுஸுகி அதன் வாகன உற்பத்தி ஆலையில் பறக்கும் காரை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார் உற்பத்தியில் ஜாம்பவனாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் பறக்கும் காரை உற்பத்தி செய்வதற்காக வேறு நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது. ஸ்கை டிரைவ் (SkyDrive) எனும் நிறுவனத்துடனேயே அது இந்த பணிகளுக்காக கை கோர்த்திருக்கின்றது. நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அதன் எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்கை கார் (Sky Car) எனும் பறக்கும் காரையே அது காட்சிப்படுத்தி இருந்தது. இந்த பறக்கும் காரின் உற்பத்தி பணிகளையே நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த பணிகள் நிறுவனத்திற்கு சொந்தமான ஜப்பானின் ஐவாடா சிட்டியில் வாகன உற்பத்தி ஆலையிலேயே தொடங்கி இருக்கின்றன.
முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக் கூடியதே அந்த பறக்கும் கார் ஆகும். மேலும், தன்னாட்சி தொழில்நுட்பத்துடன் அது பறக்கும் என கூறப்படுகின்றது. சுஸுகியும், ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார்களை உருவாக்கும் பொருட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கை கோர்த்தன (கூட்டணி மேற்கொண்டன) என்பது குறிப்பிடத்தகுந்தது.
சுஸுகி தயாரிக்கும் இந்த பறக்கும் கார் பறக்க மற்றும் தரையிறங்க விமானத்திற்கு தேவைப்படுவதைப் போல ஓடு தளம் தேவைப்படாது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் மாடி வீட்டின் மேற்கூரையே அது வானில் பறக்க மற்றும் தரையிறங்க போதுமானது ஆகும்.
ஆமாங்க, ஹெலிகாப்டரைபோல இயங்கும் திறன் கொண்டதே இந்த பறக்கும் கார் ஆகும். இந்த பறக்கும் காரை ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 யூனிட் என்கிற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய சுஸுகி திட்டமிட்டு இருக்கின்றது. 15 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் திறனை வழங்கும் காராகவே சுஸுகியின் ஸ்கை கார் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது இந்த நேரம் அதிகம் செய்யப்பட்ட நிலையில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் பறக்கும் திறனே ஸ்கை காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக 12 மோட்டார்கள் மற்றும் ரோட்டார்கள் அந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் மூன்று பேர் வரை பறக்க முடியும்.
இந்த பறக்கும் காரை சுஸுகி நிறுவனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகின்றது. ஆனால், இந்த சம்பவம் அரங்கேறக் கூடிய நாள் பற்றிய துள்ளிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த சம்பவத்தை மாருதி சுஸுகி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்த உலகமும் பறக்கும் காரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆவலை தீர்த்து வைக்கும் முயறச்சியிலேயே உலகநாடுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே சுஸுகி அதன் பறக்கும் காரின் உற்பத்தி பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெகுவிரைவில் இந்த காரின் சோதனையோட்ட பணிகளையும் அதனைத் தொடர்ந்து பயன்பாட்டிற்கும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








