என்ன மனுஷன்யா! மக்களின் இதயங்களை வென்ற ஸ்விக்கி டெலிவரி ஊழியர்! இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் அபூர்வம்!

பெங்களூர் நகரில் வசித்து வருபவர் சர்வன் டிக்கு. இவர் தி ப்ராடக்ட் ட்ரீ-யின் நிறுவனர். எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர்) தற்போது பதிவு ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் கோரமங்களா பகுதியில் இருந்து சர்ஜாபூர் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சர்வன் டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஆனால் வழியில் பெட்ரோல் இல்லாமல் பைக் திடீரென நின்று விட்டது. இதனால் அவர் நடுவழியில் தவிக்க நேரிட்டது. பெட்ரோல் நிரப்ப வேண்டுமென்றால், அவர் 2.50 கிலோ மீட்டர் பைக்கை தள்ளியாக வேண்டும்.

Swiggy Delivery Boy Helps Man Who Ran Out Of Fuel

ஏனெனில் பெட்ரோல் பங்க் அவ்வளவு தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் கடவுள் போல், ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் அங்கு வந்தார். என்ன நடந்தது? என சர்வன் டிக்குவிடம் அவர் கேட்க, பெட்ரோல் தீர்ந்து விட்டது என்பதை சர்வன் டிக்கு விளக்கியுள்ளார். இதன் பின் பெட்ரோல் பங்க்கை அடைய சர்வன் டிக்குவிற்கு அவர் உதவினார்.

ஸ்விக்கி டெலிவரி பாய் வந்தது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஆகும். அந்த பைக்கின் மூலம், சர்வன் டிக்குவின் பைக்கை 'டோ' செய்து, பெட்ரோல் பங்க்கிற்கு சென்று சேர அவர் உதவினார். ஆனால் துரதிருஷ்டவசமாக பெட்ரோல் பங்க் மூடப்பட்டிருந்தது. எனினும் ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு 500 ரூபாயை சர்வன் டிக்கு வழங்கினார்.

ஸ்விக்கி டெலிவரி பாய் செய்த உதவிக்கான கைமாறு இது. ஆனால் ஸ்விக்கி டெலிவரி பாய் இதனை ஏற்கவில்லை. தொடர்ந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு பெட்ரோல் பங்க்கிற்கு சர்வன் டிக்கு சென்று சேர அவர் உதவினார். அங்கு பெட்ரோல் நிரப்பியதும் சர்வன் டிக்கு மீண்டும் பணத்தை நீட்டினார். ஆனால் இம்முறையும் ஸ்விக்கி டெலிவரி பாய், பணத்தை ஏற்கவில்லை.

மாறாக, ''இன்று உங்களுக்கு உதவி தேவைப்பட்டது. நாளை அது எனக்கு தேவைப்படலாம். அப்போது எனக்கு யாராவது உதவி செய்வார்கள்'' என கூறி விட்டு, ஸ்விக்கி டெலிவரி பாய் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவங்களை எல்லாம் சர்வன் டிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். அத்துடன் அந்த ஸ்விக்கி டெலிவரி பாய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உண்மையில் இது போன்ற மனிதர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதை நமது நெட்டிசன்கள் சரியாக செய்து வருகின்றனர். தக்க நேரத்தில் தனக்கு உதவிய ஸ்விக்கி டெலிவரி பாய், டிப்ஸ் எதையும் வாங்காத நிலையில், இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும்போதெல்லாம் டெலிவரி பாய்களுக்கு டிப்ஸ் வழங்குவேன் என சபதம் எடுத்துள்ளாராம் சர்வன் டிக்கு!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலையில் தவித்து கொண்டிருந்த ஒருவருக்கு உதவி செய்த ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு நாங்களும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் நீங்கள் எங்கு செல்வதாக இருந்தாலும், வாகனத்தில் எரிபொருள் எவ்வளவு? என்பதை பார்த்து விட்டு அதற்கு பிறகு ஆக்ஸலரேட்டரை முறுக்குங்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

Article Published On: Wednesday, October 25, 2023, 23:51 [IST]
English summary
Swiggy delivery boy helps man who ran out of fuel read full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+