எந்திர துப்பாக்கி சகிதம் ஏலத்திற்கு வந்த ஜேம்ஸ்பாண்ட் கார்!

துப்பாக்கி மற்றும் இதர இத்தியாதிகளுடன் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி5 கார் ஏலத்திற்கு வந்துள்ளது. 4.5 மில்லியன் டாலருக்கு இந்த கார் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோல்டு ஃபிங்கர், தண்டர்பால் உள்ளிட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இரு படங்களிலும் பிரிட்டிஷ் உளவாளியாக ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்த சீயன் கேனரி இந்த காரை வைத்து அசரடித்திருப்பார். ஜேம்ஸ்பாண்ட் கார்களுக்கு உரிய கஸ்டமைஸ் வசதிகள் கொண்ட இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரை 2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தாமஸ் ஸ்ட்ராமான் 2.7 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.

இந்த காரில் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்காக பொருத்தப்பட்ட ஸ்பெஷல் துப்பாக்கிகள், ஆளை தூக்கி எறியும் இருக்கை, விசேஷ ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் பழுதடைந்திருந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து தற்போது ஏலத்தில் விட இருக்கிறார் தாமஸ். ஸ்லைடரில் அந்த காரின் படங்களை காணலாம்.

ஜேம்ஸ்பாண்டின் வலது கரம்

ஜேம்ஸ்பாண்டின் வலது கரம்

ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தின் வீர பராக்கிரமங்களுக்கு வலது கரமாக உதவியதில் அஸ்டன் மார்ட்டின் கார்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த 1964ம் ஆண்டு அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் தன்மையை உலக அளவில் கொண்டு சென்றதில் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.அப்படி என்ன விசேஷங்கள் இருக்கின்றன இந்த காரில், அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்

ஜேம்ஸ்பாண்ட் வரிசையின் 3வது படமான கோல்டு ஃபிங்கரில் இந்த டிபி5 கார் பயன்படுத்தப்பட்டது. 1963-1965ம் ஆண்டு காலகட்டத்தில் விற்பனைக்கு கிடைத்த இந்த மாடலில் விசேஷ அம்சங்களுடன் படத்திற்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டது.

 விசேஷ அம்சங்கள்

விசேஷ அம்சங்கள்

எஜெக்டர் இருக்கை, எந்திர துப்பாக்கி, குண்டு துளைக்காத கேடயம், அடுத்த காரின் டயரை பஞ்சராக்கும் லிவர் என ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. அதனை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

புல்லட் ப்ரூப்

புல்லட் ப்ரூப்

பின்னால் வரும் வாகனத்திலிருந்து வில்லன்கள் சுடும்போது பின்புற கண்ணாடிகள் வழியாக குண்டுகள் உள்ளே வருவதை தடுக்கும் வசதி கொண்ட புல்லட் புரூப் கேடயம். டிரைவர் இருக்கைக்கு இடதுபுறத்தில் கட்டுப்பாட்டு சுவிட்ச் மூலம் இதனை இயக்கலாம்.

எக்ஸ்ட்ரா பம்பர்

எக்ஸ்ட்ரா பம்பர்

முன்னால் செல்லும் வாகனத்தை முட்டித் தள்ளுவதற்கு பயன்படும் ஆயுதத்தை படத்தில் காணலாம்.

 ரியர் எக்ஸ்ட்ரா பம்பர்

ரியர் எக்ஸ்ட்ரா பம்பர்

பின்னால் வரும் வாகனங்கள் தொல்லை கொடுத்தாலோ அல்லது இடிக்க முயன்றாலோ அதனை தடுக்கும் வசதி கொண்ட எக்ஸ்ட்ரா பம்பர்.

எஜெக்டர் சீட்

எஜெக்டர் சீட்

இருக்கையில் அமர்ந்திருக்கும்போது கியர் லிவரில் இருக்கும் பட்டனை விரல் நுனியால் அழுத்தினால் போதும். எஜெக்டர் இருக்கை ஆளை வெளியே தூக்கி எறிந்து விடும். மேலும், காரின் கூரையும் தூக்கி எறியும் வகையில் அமைக்கப்பட்டது,

எந்திர துப்பாக்கி

எந்திர துப்பாக்கி

ஹெட்லைட்டின் கீழே இருக்கும் இண்டிகேட்டரின் உள்ள எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. தேவையெனில் ஒரு பட்டனை அழுத்தினால் டிரைவர் இருக்கையில் இருந்தவாறே இதனை இயக்க முடியும்.

 ஆன்டென்னா

ஆன்டென்னா

ஜேம்ஸ்பாண்ட் காரில் ஆண்டென்னா இருப்பதை காணலாம்.

 தொழில்நுட்பத்தின் உச்சம்

தொழில்நுட்பத்தின் உச்சம்

எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் மிகச்சிறப்பான பாதுகாப்பு தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் அஸ்டன் மார்ட்டின் டிபி5.

முன்புற புல்லட் ப்ரூப் கேடயம்

முன்புற புல்லட் ப்ரூப் கேடயம்

சுவிட்சை தட்டினால் முன்புற பேனட்டை தூக்கி புல்லட் ப்ரூப் கேடயமாக பயன்படுத்தும் வசதி.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 3995 சிசி 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த கார் அதிகபட்சம் 230 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்ததோடு, 8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

பொதிந்து கிடக்கும் அம்சங்கள்

பொதிந்து கிடக்கும் அம்சங்கள்

இந்த காரின் வெளிப்புறத்தில் இருக்கும் அத்துனை பாதுகாப்பு வசதிகளையும் பார்த்தீர்கள். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இன்டிரியர் மற்றும் இதர வசதிகளை பார்க்கலாம்.

தொலைபேசி

தொலைபேசி

இப்போது வரும் கார்களில் இருக்கும் தொடர்பு வசதிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த காரின் டிரைவர் இருக்கைக்கு வலதுபுறம் டெலிபோன் பொருத்தப்பட்டிருந்தது.

கட்டுப்பாட்டு வசதி

கட்டுப்பாட்டு வசதி

காரில் இருக்கும் அனைத்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை இயக்குவதற்கு டிரைவருக்கு இடதுபுறத்தில், கியர் லிவருக்கு பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் சுவிட்சுகளை படத்தில் காணலாம்.

நாங்கெல்லாம் அப்பவே அப்படி!!

நாங்கெல்லாம் அப்பவே அப்படி!!

தற்போது வரும் கார்களில் செயற்கைகோள் இணைப்பில் இயங்கும் நேவிகேஷன் சிஸ்டம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது போன்று இந்த காரில் வரைபடத்தை பொருத்தியிருப்பதை படத்தில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 26, 2013, 12:33 [IST]
English summary
James Bond's legendary Aston Martin, complete with Bond gizmos is up for grabs at a mind boggling $US4.5 million. Swiss Millionaire Thomas Straumann has put up this legendary Aston Martin DB5 up for sale. The Aston Martin DB5 up for sale, is the original Bond car which was driven by Sean Connery as the fictional British spy in Goldfinger (1964) and Thunderball (1965).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+