உலகின் அதிகவேகச் செயல்திறன் கொண்ட கார் சுவிட்சர்லாந்து மாணவர்கள் சாதனை

Written By: Krishna

வாழ்க்கை ஒரு பந்தய சாலை. விநாடி முள்ளை விட வேகமாக ஓடும் இந்த உலகில், முந்திச் சென்று முன்னேறுபவர்கள் யார்? என்ற த்ரி்ல்லான ரேஸ்தான் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு ஈடாக புதிய தொழில்நுட்பங்களும் சூறாவளி போல படுவேகமாக இந்த உலகை திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால், நாமும் அதற்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்களே.... அதேதான்... தகுதியுள்ளவை மட்டுமே இந்த சமூகத்தில் தப்பிப் பிழைக்கும்.

அதற்குத் தகுந்தாற்போல தினந்தோறும் பழையன கழிந்து புதியன புகுந்து வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் ஆச்சரியத்தை மட்டும் உருவாக்காமல் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை முறையையும் தீர்மானிக்கின்றன.

அந்த வகையில் சுவிட்சர்லாந்து மாணவர்கள், உலகிலேயே அதிவேகமாக செயல்படக்கூடிய பந்தயக் காரை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர். இடிஎச் ஜூரீச் மற்றும் லூசர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் அண்டு ஆர்ட்ஸ் என்ற இரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 30 மாணவர்கள் இந்த அதிகவேக செயல்திறன் காரினை உருவாக்கியுள்ளனர்.

மிகத் துரிதமாக உச்ச வேகத்தை அடையும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது காரை ஓட்டத் தொடங்கிய ஒன்றரை விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய முடியும். உண்மைதான் வெறும் ஒன்றரை விநாடிகளில் புயல் காற்றைப் போல பயணிக்கலாம்.

சர்வதேச அளவில் எந்தக் காரிலும் இவ்வளவு விரைவாக உச்ச வேகத்தை அடையும் வசதி இல்லை. இளைய தலைமுறையின் உத்வேகம், இந்த உலகையே தலைகீழாகச் சுழல வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Swiss Students Create Worlds Fastest Accelerating Car.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark