இந்தூரில் குப்பை அள்ள போகும் 100 மின்சார வாகனங்கள்.. புத்தம் புதுசா வாங்கினதுக்கு இதுக்காகதானா!!
நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் பரந்துவிரிந்துக் காணப்படுகின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்த இடத்தில் எல்லாம் இப்போது இ-வாகனங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு உகந்த நண்பனாக எலெக்ட்ரிக் வாகனங்கள் செயல்படும் என மிக உறுதியாக நம்பப்படுவதன் விளைவாகவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் இருந்த இடத்தை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களால் அரசுகள் நிரப்பி வருகின்றன. மக்களின் போக்குவரத்தில்கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்ல நாட்டு மக்களையும் மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் விதமாக சிறப்பு சலுகைகள் மற்றும் மானியங்களை அரசுகள் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே 100 புதிய மின்சார வாகனங்கள் குப்பை அள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, நகரங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டே இந்த 100 மின்சார வாகனங்களும் செயல்பட இருக்கின்றன. இந்தூரை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டே இந்த வாகனங்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. வாங்கப்பட்டு இருக்கும் அனைத்தும் ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் ஐஇவி3 (SWITCH IeV3) மாடல் ஆகும்.
பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் எலெக்ட்ரிக் வாகனமே இதுவாகும். இந்த வாகனத்தை குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பொருட்டு இந்தூர் நகராட்சி பயன்படுத்த இருக்கின்றது. குப்பைகளைக் கையாள்வதற்கு என தனித்துவமான உடல் அமைப்பை கஸ்டமைஸ் செய்து ஸ்விட்ச் நிறுவனம் இந்தூர் நகராட்சியிடம் வழங்கி இருக்கின்றது.

அதாவது, குப்பைகள் மீண்டும் வெளியே பறக்காத வண்ணம் முழுமையாக அடைக்கப்பட்ட உடல் அமைப்பைக் கொண்டதாகவே இந்த வாகனத்தை தயார் செய்திருக்கின்றது. 1.25 டன் எடையுள்ள பொருட்களை கையாளும் திறன் கொண்ட வாகனமே இந்த ஸ்விட்ச் ஐஇவி3 ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதற்காக 25.6 KWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி (Lithium ion battery)-யே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், 40 kW மற்றும் 190 என்எம் டார்க் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும்.
இதுமட்டும் அல்ல ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் வீல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டூயல்-டோன் நிறம் கொண்ட கேபின் மற்றும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன கால வசதிகளை இந்த வாகனத்தில் ஸ்விட்ச் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்களை இந்த ஸ்விட்ச் ஐஇவி3 மின்சார லோடு வாகனம் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தூர் போன்ற நகரங்களில் மட்டுமல்ல நம்முடைய தமிழகத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக மின்சார வாகனங்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. குப்பை சேகரிப்பில் மட்டுமல்ல டெலிவரி சேவையிலும் மின்சார வாகனங்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








