மூன்றரை கோடி ரூபாய் சொகுசு காரை வாங்கியது அவங்களா! கொஞ்சம் கூட அடையாளமே தெரியல! ஆள் மொத்தமா மாறீட்டாங்க!

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். விலை (Price) உயர்ந்ததாக இருந்தாலும் கூட, திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல நடிகையான டாப்ஸி (Taapsee) தற்போது மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரை வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில், டாப்ஸி நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

Taapsee Buys Mercedes-Maybach GLS 600

டாப்ஸி தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில், 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 4.0 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 557 பிஎஸ் பவர் மற்றும் 730 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ஹைப்ரிட் சிஸ்டம் தனியாக 22 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

Mercedes-Maybach GLS 600

மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், ஷாம்பெயின்களை வைத்து கொள்ள கூடிய குளிர்சாதன பெட்டி, எலெக்ட்ரானிக் பனரோமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

இதுதவிர 8 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் ஹை பீம் அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா, ஆக்டிவ் லேன் கீப்பிங் அஸிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட் மற்றும் ஆக்டிவ் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகளும், மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன் இது சிபியூ வழியில் இந்தியாவிற்கு வருகிறது. Completely Built Unit என்பதன் சுருக்கம்தான் CBU. அதாவது முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி (Import) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரின் விலை மிகவும் அதிகம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 2.92 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை தோராயமாக 3.50 கோடி ரூபாய் வரை வரும். அதே நேரத்தில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்தால், விலை இன்னும் அதிகரித்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை டாப்ஸியிடம் ஏற்கனவே மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) போன்ற மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரும் இணைந்துள்ளது. இதற்காக டாப்ஸிக்கு நாம் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாப்ஸி தனது மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 காரை பல்லேடியம் சில்வர் நிறத்தில் வாங்கியுள்ளார். பொதுவாக இந்த நிறத்தில் யாரும் இந்த காரை வாங்குவதில்லை. ஆனால் டாப்ஸி எப்போதும் சற்று வித்தியாசமானவர். எனவே அவர் பல்லேடியம் சில்வர் நிறத்தை தேர்வு செய்துள்ளார். சாலையில் கார் தனித்து தெரிய வேண்டுமென்பதற்காக டாப்ஸி இந்த நிறத்தை தேர்வு செய்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 18, 2023, 18:28 [IST]
English summary
Taapsee buys mercedes maybach gls 600 all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+