ரயில் ஓடும் போது "தடக் தடக்" என சத்தம் எப்படி வருது தெரியுமா? வைரலாகும் சூப்பர் வீடியோ!

ரயில்கள் வேகமாக பயணிக்கும் போது ரயிலில் இருக்கும் பயணிகளுக்கு தடக் தடக் என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ரயில் பயணத்தில் இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக இந்த கேள்வி இருக்கிறது. அதற்கு விடை சொன்னாலும் பலருக்கும் இது புரிவதில்லை. இதை புரிய வைக்கும் வகையில் ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

நீங்கள் ரயிலில் பயணம் செய்திருந்தால் நிச்சயம் தடக் தடக் என்ற ரயில் பயணிக்கும் போது வரும் சத்தம் உங்களுக்கு கேட்காமல் இருந்திருக்காது. ரயிலுக்கு இந்த சத்தம் என்பது ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. அந்த அளவுக்கு இந்த சத்தம் ரயிலின் உருவ அமைப்போடு இணைந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. இந்த சத்தத்தை வைத்து இசை எல்லாம் உருவாக்கி விட்டார்கள்.

tadak tadak sound in railway track

இந்நிலையில் இந்த சத்தம் எப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக இந்த கேள்விக்கு பல்வேறு தரப்பிலிருந்து பதில்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி தான் இந்த சத்தத்திற்கு காரணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மக்களுக்கு இதை சரியாக புரிய வைக்கும் வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஒரு தண்டவாளத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது ரயில் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி பகுதியை சரியாக இந்த வீடியோவில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

tadak tadak sound in railway track

அப்பொழுது ரயில் தண்டவாள இடைவெளியை ரயிலில் உள்ள சக்கரங்கள் கடக்கும்போது தண்டவாளங்கள் சிறிய அளவில் அசைகின்றன. அந்த அசைவின் மூலம் கீழே இருக்க இரும்பும் மேலே தண்டவாளத்தில் உள்ள இரும்பும் உரசுவதால் இந்த சத்தம் ஏற்படுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

இது இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதுதான் இந்த ரயில் பயணத்தில் ஏற்படும் சத்தத்தின் முக்கியமான காரணமாக இருக்கிறது. இப்பொழுது சிலருக்கு ரயில் தண்டவாளங்களுக்கு இடையே ஏன் இந்த இடைவெளி இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்படலாம். இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த இடைவெளி மட்டும் இல்லை என்றால் ரயில்களை இயங்க முடியாத அளவுக்கு பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் ரயில்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.

tadak tadak sound in railway track

இதற்கு முக்கியமான காரணம் ரயில் தண்டவாளங்கள் எல்லாம் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களாகும். இந்த ரயில் தண்டவாளங்கள் எல்லாம் வெட்ட வெளியில் இருப்பதால் நேரடியாக சூரிய வெளிச்சத்திற்கு உள்ளாகின்றன. இதனால் வெப்பம் ரயில் தண்டவாளங்களில் அதிகமாகிறது. பொதுவாக இரும்பு என்பது அதிக சூடாகும் போது விரிவடையும், அதிக குளிர்ச்சியாகும் போது சுருங்கும் தன்மை கொண்டது.

இதனால் அதிக வெயில் இருக்கும் போது தண்டவாளங்கள் விரிவடைந்தால் அடுத்தடுத்து தண்டவாளங்களை இருக்கும்போது இடையில் இடைவெளி இல்லை என்றால் ஒரு தண்டவாளத்துடன் இன்னொரு தண்டவாளம் மோதி தண்டவாளத்தின் தன்மையை உருக்குலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. இரண்டு தண்டவாளர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி இருக்கும்போது அதிக வெப்பமானாலும் தண்டவாளம் விரிவடைந்தால் அந்த இடைவெளிக்குள் மட்டுமே விரிவடையும்.

மேலும் தண்டவாளங்களை கீழே உள்ள சிமெண்ட் தளத்துடன் சேர்த்து பிடித்திருக்கும் பகுதியும் இரும்பால் செய்யப்பட்டதாக இருக்கும். இந்த இரும்பும் தண்டவாளத்துடன் டைட்டாக இணைக்கப்பட்டிருக்காது. இதற்கு முக்கியமான காரணம் அதிக வேகத்தில் ரயில் பயணம் செய்யும்போது தண்டவாளங்கள் அசைவு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

தண்டவாளன்களை பிடித்து இருக்கும் இரும்பு டைட்டாக பிடித்திருந்தால் அசைவு கொடுக்கும் போது அழுத்தம் ஏற்பட்டு தண்டவாளன்களோ அல்லது அதைப் பிடித்து இருக்கும் இரும்பு பிடியோ உடைந்து போக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக ரயிலில் வேகமாக செல்லும்போது தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி காரணமாக இந்த சத்தம் ஏற்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலில் பயணம் செய்யும் பலருக்கும் இந்த தடக் தடக் என்ற சத்தம் நிச்சயம் அவர்களுக்கு இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கும். இதற்கு என்னதான் விளக்கம் அளித்தாலும் இப்படியான வீடியோக்கள் வெளியாவதன் மூலம் இதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 10:48 [IST]
English summary
Tadak tadak sound railway track origin viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X