இதுல ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா...?!

நம் நாட்டின் போக்குவரத்து நெரிசல் கதைகளை சொல்லி மாளாது. ஆனால், இந்த வீடியோவை பார்த்தால் தலைசுற்றல் வந்துவிடுகிறது. ஒரு மேம்பாலத்தில் சிக்னலுக்காக காத்திருக்கும் ஸ்கூட்டர் கூட்டத்தை பார்த்தால் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

தைவான் நாட்டிலுள்ள ஒரு சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்து தலைசுற்றல் வருவது ஒருபுறம் இருந்தாலும், இந்த வீடியோவில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.

சிக்னலில் பச்சை விளக்கு போட்டவுடன் ஸ்கூட்டரில் வரும் அனைவரும் எந்தவொரு பதட்டமுமின்றி ஒருவர் பின் ஒருவராக அழகாக செல்கின்றனர். அவ்வளவு ஸ்கூட்டர்களும் மிக இயல்பாக அந்த சிக்னலை கடந்து செல்கின்றன. நம் நாட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் பார்க்க வேண்டிய வீடியோ இது.

இதுவே நம்மூர் சிக்னலாக இருந்தால் என்ன நடத்திருக்கும். ஹாரனை கிழி கிழியென கிழித்து முன்னால் செல்பவரை எரிச்சலூட்டி, அவரை கீழேத் தள்ளும் வரை ஓயமாட்டார்கள் அல்லவா... அது இருக்கட்டும், இந்த வீடியோவை பார்த்து நல்லது கற்றுக்கொண்டால் சந்தோஷமே...!!
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/rGp2MpKJ0nA" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2014, 12:43 [IST]
English summary
We came across this video in Taiwan where a sea of what must be thousands of scooters waiting at a red light. The scene looks to be an off ramp but if you think its going to be a cacophony of horning, angry commuters, you couldn't be more wrong. The scene is almost calming in a strange way, since all the motorists are calm and move forward safely and slowly in such an orderly fashion, that it's a sight to see.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+