புகாட்டி வேரான் கார் மீது இந்த சாமியாருக்கு வந்த ஆசையை பாருங்கள்!

Written By:

பொன், பெண், பொருள் ஆசையை துறந்தவர்கள் சாமியார்களாக பாவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது இது மூன்றின் மீது குறிவைத்தே சாமியார்கள் உருவாகிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

புகாட்டி வேரான்
 

இப்போது நீங்கள் பார்க்கப்போகும் சாமியாரும் கிட்டத்தட்ட ஆடம்பரத்திற்கும், சர்ச்சைக்கும் பெயர் போனவர்தான். ஏற்கனவே, இவரை பற்றிய ஒரு செய்தியை நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படித்திருப்பீர்கள்.

அதாவது, கார்களை வினோதமாக மாற்றி பயன்படுத்தி வருவது குறித்த செய்தி அது. ஒன்றல்ல, இரண்டல்ல, அவர் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் வினோதமான டிசைனை கொண்டவை.

அதில், புகாட்டி வேரான் காரை போன்ற மாதிரி மாடல் ஒன்றும் அடக்கம். ஹோண்டா அக்கார்டு காரை இவ்வாறு மாற்றியிருக்கிறார் இந்த சாமியார். இதனை சாமியாரின் தேர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதில், பவனி வருவதில் அலாதி சுகம் காண்கிறார் இந்த சாமியார். 

அவரது நேரடி ஆலோசனைகளின்படி இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். சாமியாரின் பாதுகாப்புக்காக இந்த காரி்ல டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், இந்த காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆசையை தீர்த்துக் கொள்வதில் சாமியார்களுக்கு நிகர் சாமியார்களே என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவே இருக்கிறது. இந்த புகாட்டி வேரான் காரின் படங்களை கேலரியில் காணலாம்.

 

Source

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Take A Look At Bugatti Veyron Replica Owned By The Messenger Of God.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X