12 மணிநேரத்தில் டெல்லி- மும்பை... கனவை சாத்தியமாக்கிய டால்கோ ரயில்!

Written By:

அதிவேக டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. ஆம். நேற்று டெல்லியிலிருந்து மும்பைக்கு இயக்கி சோதனை செய்யப்பட்ட டால்கோ ரயில் 12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை வந்தடைந்து.

இந்த சோதனை ஓட்டம் ரயில்வே துறையினரிடமும், ரயில் பயணிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், டெல்லி- மும்பை இடையிலான பயண நேரமும் பல மணி நேரம் குறையும் என்பதும் மிகுந்த ஆவலை தூண்டியிருக்கிறது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

டெல்லி- மும்பை இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில் ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கி இறுதி கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நடத்தப்பட்ட இரு சோதனை ஓட்டங்கள் மழை மற்றும் சிக்னல் பிரச்னைகளால் தாமதமடைந்தது.

 திருப்திகரம்

திருப்திகரம்

இந்த நிலையில், மூன்றாவது சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. டெல்லியிலிருந்து பிற்பகல் 2.47 மணிக்கு புறப்பட்ட டால்கோ ரயில், இன்று அதிகாலை 2.54 மணிக்கு மும்பையை வந்தடைந்தது. அதாவது, 12 மணி 7 நிமிடங்களில் டால்கோ ரயில் டெல்லி- மும்பை இடையிலான தூரத்தை கடந்தது.

சரியான நேரம்

சரியான நேரம்

வழக்கத்திற்கு மாறான சில காரணங்களால் 7 முதல் 8 நிமிடங்கள் டால்கோ ரயில் தாமதமடைந்ததாகவும், சரியான பயண நேரம் என்று பார்த்தால் 12 மணிநேரத்தில் டால்கோ ரயில் கடந்து விட்டதாகவம் ரயில்வே துறை அதிகாரி விஜய் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் டால்கோ ரயில் இந்த சோதனை ஓட்டத்தின்போது இயக்கப்பட்டிருக்கிறது. மேலும், இலக்கு வைக்கப்பட்ட பயண நேரத்திற்குள்ளாகவே டால்கோ ரயில் வந்து சேர்த்தகாவும் விஜய் குமார் கூறினார்.

அடுத்து...

அடுத்து...

வரும் 12ந் தேதி டெல்லி- மும்பை இடையில் கடைசி சோதனை ஓட்டம் நடத்தப்படப்பட இருக்கிறது. பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் மும்பையை நள்ளிரவு 2.23 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 11 மணி 38 நிமிடங்களில் இரு நகரங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகம்

வேகம்

கடைசி சோதனை ஓட்டம் மணிக்கு 150 கிமீ வேகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், வளைவுகளில் வேகத்தை கூட்டி சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் திருப்திகரமாக அமைந்தால், விரைவாகவே டால்கோ ரயில்கள் இயக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பயண நேரம்

பயண நேரம்

தற்போது டெல்லி- மும்பை இடையில் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்கள் 17 மணி நேரத்தில் இரு நகரங்களையும் கடக்கிறது. ஆனால், டால்கோ ரயில்கள் 11 மணி 38 நிமிடங்களிலேயே கடந்துவிடும் என்பதால், பயண நேரம் 5 மணிநேரத்திற்கும் மேலாக குறையும்.

 அதிவேக ரயில்

அதிவேக ரயில்

சோதனை ஓட்டங்கள் குறித்த அறிக்கைகள் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படும். அதன்பிறகு, டெல்லி- மும்பை மட்டுமின்றி, டெல்லி- சென்னை, டெல்லி- கொல்கத்தா ஆகிய நீண்ட தூர வழித்தடங்களில் டால்கோ ரயில்கள் விடப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Talgo Train completes Delhi-Mumbai train journey in Just 12 hours.
Story first published: Wednesday, August 10, 2016, 12:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark