இந்தி நடிகரை பிரேக்கப் செய்த தமன்னாவிடம் இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

நடிகை தமன்னா மற்றும் இந்தி நடிகர் விஜய் வர்மா ஆகியோர் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ் மட்டுமல்லாமல்ல இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் பிரேக்கப் செய்து வெளியான நிலையில் பலர் இவர் குறித்து சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர். இந்நிலையில் தமன்னாவிடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் குறித்தும் அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா, ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்போது தமன்னாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை தமன்னாவும் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஏற்றார் போல் இவர்களும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றனர்.

Tamannaah Vijay Varma Breakup

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இது தமன்னா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமன்னாவும் விஜய் வர்மாவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என பலர் நினைத்துவந்த நிலையில் இந்த செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் தமன்னா குறித்து பலர் தேடி வருகின்றனர். அவரிடம் உள்ள கார் கலெக்ஷனை பார்த்தால் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

நடிகை தமன்னாவிடம் பிஎம்டபிள்யது 320ஐ கார் இருக்கிறது. இந்த காரை இவர் பயன்படுத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடியில் பிக்கப் செய்து விடும்.

Tamannaah Vijay Varma Breakup

அடுத்ததாக இவரிடம் லேண்ட்ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் இருக்கிறது. இந்த காரும் ஒரு அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கார் தான் இது மட்டுமல்ல இந்த கார் சற்று விலை அதிகமாகவும் இருக்கும்.இந்த காரை பெரும்பாலும் பிரபலங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்ததாக நடிகை தமன்னாவிடம் மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் இருக்கிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.7 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ90 லட்சம் முதல் ரூ1.08 கோடி என்ற விலை வரை விற்பனையாகி வருகிறது.

Tamannaah Vijay Varma Breakup

அடுத்ததாக தமன்னாவிடம் ஆடி நிறுவனத்தின் க்யூ 7 என்ற சொகுசு எஸ்யூவி கார் இருக்கிறது. இந்த காரும் சொகுசு வசதிகள் அதிகம் நிறைந்த கார் தான் இந்த கார் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை தமன்னாவிடம் காஸ்ட்லி கார்கள் இருப்பது பலருக்கு தெரியும். தற்போது அவரிடம் என்னென்ன கார்கள் எல்லாம் இருக்கிறது என்ற தகவலும் உங்களுக்கு கிடைத்துள்ளது. நிச்சயம் தமன்னா காதல் பிரேக்கப் குறித்த செய்தி வெறும் வதந்திதான் என தகவல் வரும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாமும் அதற்காக காத்திருப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 23:00 [IST]
English summary
Tamannaah bhatia car collection full list
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X