கல்யாணமே பண்ணிக்காம அம்மா ஆன நடிகை தமன்னா! பொண்ணு கூட 1.25 கோடி ரூபா கார்ல ஒன்னா பாத்ததும் ஸ்டண் ஆன ரசிகர்கள்!
இந்திய சந்தையில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்ற செல்வந்தர்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) திகழ்கிறது. இதன் கம்பீரமான தோற்றத்திற்காகவே, பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் ரசிகர்களாக உள்ளனர். ஜீப் வ்ராங்லர் (Jeep Wrangler), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) போன்ற கார்களுக்கு எல்லாம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போட்டி மாடலாக திகழ்கிறது.
இது ஆஃப்-ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். எனவே அடிக்கடி ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ள கூடிய நபர்களுக்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஏற்றதாக உள்ளது. அத்துடன் இது சொகுசான கார்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

எனவே பிரீமியம் வசதிகளுடன், சாலையில் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, கம்பீரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஏற்றதுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் ஆரம்ப விலையே 1.04 கோடி ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் அதிக விலை என்பதால்தான், இந்தியாவின் செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமான காராக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் திகழ்ந்து வருகிறது.

அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சன்னி தியோல் (Sunny Deol), ஜிம்மி ஷெரிகல் (Jimmy Shergill), சோனம் கபூர் (Sonam Kapoor) மற்றும் கரீனா கபூர் (Kareena Kapoor) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர்.
உண்மையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் உரிமையாளர்கள் பட்டியலை எடுத்தால், அது நீண்டு கொண்டே செல்லும். எனவே ஒரு சிலரை மட்டுமே நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இந்த சூழலில், 2 பிரபலமான நடிகைகள் தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் ஒரு நடிகை தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) ஆவார். இவரை பற்றிய அறிமுகமே தேவையில்லை. தமன்னா பாட்டியா இந்தியா முழுக்க பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் மற்றொரு நடிகை ரஷா தடானி (Rasha Thadani) ஆவார்.
பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் (Raveena Tandon) மகளான இவர், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமன்னா-ரஷா தடானி ஆகிய இருவரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்து விட்டு ஒன்றாகவே சென்றுள்ளனர். அப்போதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததும், போட்டோ, வீடியோ எடுக்க ரசிகர்கள் ஆரவாரம் செய்வதையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மொத்தம் 3 பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. அவை 90, 110, 130 ஆகியவை ஆகும். இதில், தமன்னா-ரஷா தடானி பயணம் செய்தது, 110 மாடல் ஆகும். இதன் மதிப்பு 1.25 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபல நடிகைகளான தமன்னாவும், ரஷா தடானியும் மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்படுகின்றனர். அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக தென்படுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் பல நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் இருவரும் ஒன்றாக வந்து சென்றுள்ளனர்.
ரஷா தடானிக்கு தற்போது 19 வயது மட்டுமே ஆகிறது. மறுபக்கம் தமன்னாவிற்கு 35 வயது ஆகிறது. சொல்லப்போனால் இவர்களின் உறவு அம்மா-மகள் போன்றது. தமன்னா தன்னை தத்து எடுத்திருப்பதாக கடந்த காலங்களில் ரஷா தடானியே நேரடியாக கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் தமன்னாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் (Vijay Varma), தமன்னாவும் தற்போது காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் நடப்பு 2025ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








