35 வயசுல கல்யாணம் பண்ண போகும் தமிழ் நடிகையா ஆடி கார்ல போறாங்க! தாலி கட்ட போறவருக்கு குடுத்து வெச்சிருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ஆடி ஏ4 (Audi A4). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ4 செடான் காரின் ஆரம்ப விலை 46.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ஆடி ஏ4 செடான் காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 55.84 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான ஆடி கார்களில் ஒன்றாக ஏ4 திகழ்கிறது. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஆடி ஏ4 காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். பாலிவுட் நடிகை யாமி கௌதம் (Yami Gautam) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இந்த சூழலில், மற்றொரு பிரபல நடிகை ஒருவர் ஆடி ஏடி 4 காரில் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) ஆவார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். எனவே இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவராக தமன்னா அறியப்படுகிறார். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆடி ஏ4 காரின் பின் இருக்கையில் அமர்ந்து தமன்னா பாட்டியா புறப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் இது தமன்னா பாட்டியாவின் சொந்த காரா? என்பது சரியாக தெரியவில்லை. தமன்னா பாட்டியாவிடம் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (Land Rover Discovery Sport), பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320ஐ (BMW 3 Series 320i), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) மற்றும் மிட்சுபிஷி பஜீரோ ஸ்போர்ட் (Mitsubishi Pajero Sport) உள்ளிட்ட கார்கள் எல்லாம் உள்ளன.
இருப்பினும் அவர் தற்போது பயணம் செய்த ஆடி ஏ4 அவருடையதா? என்பது தெரியவில்லை. இந்த காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டர்போ பெட்ரால் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது ஆரம்ப நிலை சொகுசு காராக இருந்தாலும் கூட, 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 8 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமன்னா பாட்டியா தற்போது பயணம் செய்த ஆடி ஏ4 கார், மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class), பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ (Jaguar XE) உள்ளிட்ட கார்களுடன், போட்டியிட்டு வருகிறது.
தமன்னா பாட்டியாவின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் காதலரும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மாவை (Vijay Varma) அவர் நடப்பு 2025ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகையான தமன்னாவை திருமணம் செய்யவுள்ளதால், விஜய் வர்மா அதிர்ஷ்டசாலி என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








