தமன்னாவிற்கு இவ்ளோ பெரிய மனசா! ஒன்னரை கோடி ரூபா கார்ல ஏறி உக்காந்ததும் செஞ்ச காரியத்தை பாருங்க!

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். எனவே தமன்னா பாட்டியாவிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இந்த சூழலில் தமன்னா பாட்டியாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Instant Bollywood இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதில், தமன்னா பாட்டியா மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

Tamannaah Bhatia Spotted In Audi Q8

ஆனால் காரில் ஏறி புறப்படுவதற்கு முன்னதாக, அங்கிருந்த ஒருவருக்கு தமன்னா பாட்டியா பணம் கொடுத்து உதவி செய்வதை நாம் காணலாம். தமன்னா பாட்டியாவிடம் இருந்து பண உதவி பெற்றவர் மாற்றுத்திறனாளி போல் தெரிகிறது. எனவே தமன்னா பாட்டியாவின் இந்த செயலை, நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சரி, இந்த வீடியோவில் நாம் பார்க்கும் தமன்னா பாட்டியா பயணம் செய்த கார் எது? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அது ஆடி க்யூ8 (Audi Q8) கார் ஆகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த ஆடி க்யூ8 கார், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தமன்னா பாட்டியாவின் பெயரில்தான் இந்த கார் இருக்கிறது.

Tamannaah Bhatia

தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே ஆடி க்யூ8 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது ஆடி க்யூ8 க்வாட்ரோ (Audi Q8 Quattro) வேரியண்ட் ஆகும். இதன் விலை 1.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.50 கோடி ரூபாய் வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த ஆடி க்யூ8 காரில், 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் ஆடி க்யூ8 கார் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் ஆடி க்8 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஆடி க்யூ8 கார் வெறும் 5.6 வினாடிகளிலேயே எட்டி விடும். எனவே செயல்திறன் மற்றும் சொகுசு என இரண்டும் கலந்த கலவையாக ஆடி க்யூ8 கார் உள்ளது.

பனரோமிக் க்ளாஸ் ரூஃப், 31.24 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், காரின் உட்புறத்தை கச்சேரியாக மாற்ற கூடிய வகையிலான 17 ஸ்பீக்கர் பேங் & ஒலுஃப்சன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உடன் பார்க் அஸிஸ்ட் ப்ளஸ் போன்றவை எல்லாம் ஆடி க்யூ8 காரின் மிக முக்கியமான வசதிகள் (Features) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமன்னா பாட்டியா தவிர, கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) மற்றும் பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா (Sanya Malhotra) போன்ற பிரபலங்களிடமும், ஆடி க்யூ8 கார் உள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, சொகுசு மற்றும் செயல்திறன் என 2 அம்சங்களும் ஒரே சேர கிடைப்பதால்தான், ஆடி க்யூ8 காரை பிரபலங்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 11, 2025, 18:33 [IST]
English summary
Tamannaah bhatia spotted in audi q8 luxury suv viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+