தங்க சிலை மாதிரி மின்றாங்க! கோடி ரூபாய் காரில் போனது அவங்களா! உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது!
தமிழ் திரையுலகில் (Tamil Cinema) முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா (Tamannaah). தமிழ் மட்டுமல்லாது, பல்வேறு மொழி திரைப்படங்களிலும் தமன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் வெளியான ஜெயிலர் (Jailer) திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்த சூழலில் தமன்னாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. இதில் விமான நிலையம் ஒன்றில் இருந்து வெளியே வந்து ஆடி க்யூ7 (Audi Q7) காரில் தமன்னா ஏறி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள 7 சீட்டர் எஸ்யூவி (SUV) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி க்யூ7 காரின் ஆரம்ப விலை 84.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 92.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஆடி க்யூ7 கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. அது 3.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். 335 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ7 காரானது, இந்தியாவில் உள்ள திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. காத்ரீனா கைஃப் (Katrina Kaif), தீபிகா படுகோனே (Deepika Padukone), பிபாஷா பாசு (Bipasha Basu), இம்ரான் ஹாஸ்மி (Emraan Hashmi), ஜான் ஆபிரஹாம் (John Abraham), கஜோல் (Kajol), சல்மான் கான் (Salman Khan), வருண் தவான் (Varun Dhawan) மற்றும் அஸின் (Asin) உள்டப பலரும் இந்த காரை வைத்துள்ளனர்.
இதில் பிபாஷா பாசு ஆடி க்யூ7 காரில் வலம் வந்த வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அந்த செய்தியை வாசகர்களுக்கு வழங்கியிருந்தது. ஆடி க்யூ7 கார் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, அதற்கு ஏற்ப பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசான பயணத்தை வழங்குவதன் காரணமாகவே, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி காரை விரும்புகின்றனர். தமன்னாவை பொறுத்தவரையில், ஆடி க்யூ7 மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார். இவை அனைத்துமே சற்று விலை உயர்ந்த கார்கள்தான்.
லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (Land Rover Discovery Sport), பிஎம்டபிள்யூ 320ஐ (BMW 320i), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) மற்றும் மிட்சுபிஷி பஜீரோ ஸ்போர்ட் (Mitsubishi Pajero Sport) போன்றவை, நடிகை தமன்னாவிடம் உள்ள கார்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


Click it and Unblock the Notifications








