கோடம்பாக்கத்திலிருந்து அடுத்து ஓர் கார் ரேஸர்... அசத்தும் நடிகர் ஜெய்!
நடிகர் அஜீத்தை தொடர்ந்து பிரபல நடிகர் ஜெய் கார் பந்தய வீரராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் இருங்காட்டு கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் ஜெய் கலந்து கொண்டு அசத்தினார்.
ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் பயந்த சுபாவமுள்ள கேரக்டர்களில் நடித்த ஜெய் சமீபத்தில் தேசிய அளவிலான கார் பந்தயத்தில் கலந்து கொண்டு பந்தய காரை சீறிப் பாயவிட்டது அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது.

சிறுவயதிலிருந்தே கார் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவு இருந்து வந்ததாக குறிப்பிடும் ஜெய், நடிகர் அஜீத்தை பார்த்து அந்த கனவு மேலும் வலுவானதாக குறிப்பிடுகிறார். முன்னணி கார் பந்தய வீரர் அப்துல்லாவை சந்தித்த பின்னரே கார் பந்தய வீரராக மாறுவதற்கான வாய்ப்புகள் உறுதியானதாக தெரிவிக்கிறார்.
கார் பந்தய வீரராக வருவதை லட்சியமாக கொண்டு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பார்முலா அந்தஸ்திலான கார் பந்தயங்களில் பங்கு பெற வேண்டும் என்ற வேட்கையுடன் தீவிர முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்.
கார் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவை அடைய முனைந்தாலும், சினிமாவையும் விடப் போவதில்லை என்று கூறுகிறார். இரண்டிலும் கவனம் செலுத்தப் போவதாக தெரிவிக்கிறார்.
வாழ்த்துக்கள் ஜெய்!


Click it and Unblock the Notifications








