ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ராகவா லாரன்ஸ்-ம் ஒருவர் ஆவார். அசத்தலான நடனம் மற்றும் துறு துறு நடிப்பிற்கு பெயர் போன நடிகராக இவர் உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு மிகப் பெரிய அளவில் சப்போர்ட் செய்யும் நடிகராகவும் ராகவா லாரன்ஸ் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்கு அவருடைய படங்களே சான்றாக உள்ளன. அவருடைய படங்கள் பலவற்றில் அவர் மாற்றுத் திறனாளி இளைஞர்களைக் காண முடியும். ஏதேனும் ஓர் காட்சியில் கட்டயாம் அவர்களை தோன்றச் செய்துவிடுவார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த நிலையிலேயே மாற்று திறனாளி இளைஞர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இரண்டு சக்கர வாகனங்களை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Lawrence scooter gift

இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக கூடுதல் சக்கரங்கள் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று சில மாற்றங்கள் மாற்று திறனாளிகளுக்காக அந்த வாகனத்தில் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக 13 இரண்டு சக்கர வாகனங்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கி இருக்கின்றார்.

இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த மாற்று திறனாளிகள் அனைவரும் தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கி வருபவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களுக்கு தற்போது இரண்டு சக்கர வாகனத்தை பரிசளித்திருப்பதைப் போலவே விரைவில் அவர்களுக்கு வீடுகளும் கட்டி தரப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ragava lawrence gifted scooter

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரே மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இடி எஃப்ஐ தொழில்நுட்பத்தை இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் பயன்படுத்தி இருக்கின்றது. மிக சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றிற்கு இந்த டெக்னாலஜியே காரணமாக இருக்கின்றது.

இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 110 (109.7) சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 8.8 என்எம் டார்க்கையும், 7,500 ஆர்பிஎம்மில் 5.75 kW பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Scooter gift

ஸ்கூட்டரில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிகாக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் காயில் ஸ்பிரிங்குடன் கூடிய ஹைட்ராலிக் டேம்பர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக முன் மற்றும் பின் வீலில் டிரம் பிரேக்குகளை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர் சந்தையில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கிளாஸ் மற்றும் மேட் சீரிஸ் ஆகியவையே அவை ஆகும். 69 ஆயிரம் ரூபாய் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்கூட்டரையே ராகவா லாரன்ஸ் தற்போது மல்லர் கலையைச் சேர்ந்த 13 மாற்று திறனாளிகளுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.

சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸும், சின்னத் திரை நடிகர் பாலாவும் இணைந்து ஏழை பெண் ஒருவருக்கு ஆட்டோவையும், மற்றொரு ஏழைப் பெண்ணிற்கு இதே டிவிஎஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டரையும் பரிசாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தனி ஆளாக ராகவா லாரன்ஸ் 13 ஸ்கூட்டர்களை ஒரே நேரத்தில் மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசாக வழங்கி அசத்தி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர் இன்னும் பலருக்கு இதுபோன்று அடுத்து வரும் நாட்களில் வாகனங்களை பரிசாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு கடந்த கால மற்றும் இப்போதைய ஸ்கூட்டர் பரிசளிப்பு சம்பவமும் சான்றாக அமைந்திருக்கின்றது. நடிகரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 17:05 [IST]
English summary
Tamil actor ragava lawrence gifted tvs zest to differently abled persons
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X