ரிப்பேரே ஆகாத பைக்கை நடிகர் விஜய் சேதுபதி வச்சிருக்காரா! அது என்ன பைக்? இலவசமா BMW பைக் எல்லாம் கிடைச்சிருக்கு
நடிப்பில் மட்டுமல்ல வாகனங்களை நேசிப்பதிலும் தனித்துவமான மனிதராக காட்சியளிக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி. ஆடம்பர கார்களை அதிகம் நேசிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் பைக்குகளை அதிகம் நேசிக்கக் கூடியவராக அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு சான்றாகவே அவரிடத்தில் இருக்கும் டூ-வீலர்கள் இருக்கின்றன. இவரிடத்தில் பழைமையான மற்றும் அரிய வகை மோட்டார்சைக்கிள் சிலவும் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், இவருக்கு சொந்தமாக ராஜ்தூத் 250 (Rajdoot 250) பைக் மாடல்கூட ஒன்றும்கூட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் சினிமா விகடன்-க்கு அவர் அளித்த பேட்டியின் வாயிலாக இந்த பைக் அவரிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமில்லைங்க, இது போன்று இன்னும் சில அரிய மற்றும் நவீன கால பைக் மாடல்களும் விஜய் சேதுபதி இடத்தில் பயன்பாட்டில் இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், அவரிடத்தில் விலை உயர்ந்த மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் நிறைந்த டிரையம்ப் பான்னேவில்லே (Bonneville) பைக் மாடலும் பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்த பைக் இந்தியாவில் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், அவர் எந்த மாடலை வைத்திருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. பான்னேவில்லே-வின் ஆரம்ப நிலை தேர்வே 9.70 லட்சம் ரூபாக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இதுமட்டுமில்லைங்க அவரிடத்தில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் ஒன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த பைக் அவருக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியதற்காக, டீலர் இலவசமாக வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும்பியிருக்கலாம், அது எப்படி பிஎம்டபிள்யூ காரை வாங்கும்போது பைக் இலவசமாக வழங்கப்படும் என. ஏனெனில், அந்த நிறுவனத்தின் பைக் ஒவ்வொன்றும் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த புதிய கார்களுக்கு இணையான விலையைக் கொண்டிருக்கும்.
இதனால்தான் பிஎம்டபிள்யூ பைக் எப்படி இலவசமாக வழங்கப்பட்டு இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் எழும்பி இருக்கின்றது. அவர் ஓர் செலிபிரிட்டி என்பதால், அவர் வாயிலாக விளம்பரத்தை தேடிக் கொள்ள இந்த செயலில் விற்பனையாளர் ஈடுபட்டு இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. அவர் அந்த பைக்கை சாலையில் ஓட்டி செல்லும்போது அதுவே அவர்களுக்கு விளம்பரமாக அமையக் கூடும்.
ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) மாடலே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 3.30 லட்சம் ஆகும். இதுமட்டுமில்லைங்க, அரிய பைக் மாடலான என்பீல்டு மினி புல்லட் மற்றும் 1952 ராயல் என்பீல்டு (துள்ளியமான மாடல் எது என்பது தெரியவில்லை) பைக் ஒன்றையும் நடிகர் விஜய் சேதுபதி வைத்திருக்கின்றார்.
இந்த பைக்குளே அவர் ஓர் பழைய பைக் விரும்பி என்பதை வெளிக்காட்டும் கையில் இருக்கின்றன. இத்துடன், அவரும் அந்த பேட்டியில் தான் ஓர் பழைய பைக் பிரியர் என்பதை தெரிவித்தார். இதனால்தான் பழைய ராஜ்தூத், ஜாவா மற்றும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை அவர் பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்.
இதில், ராஜ்தூத் பைக் மட்டும் இப்போது அவரிடத்தில் இல்லை என தெரிவித்திருக்கின்றார். அது உடுமலைப்பேட்டையில் ஓர் மெக்கானிக்கிடம் ரிப்பேருக்காக கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதை இன்னும் அவர் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே அந்த பைக் மெக்கானிக்கிடமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேபோல், தான் வைத்திருக்கும் என்பீல்டு மினி புல்லட் ரிப்பேரே ஆகாது என்கிற ஆச்சரியமளிக்கும் தகவலையும் அவர் தெரிவித்திருக்கின்றார். என்பீல்டு என்கிற பேட்ஜில் பைக்குகளை விற்பனைச் செய்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஓர் 200 சிசி புல்லட் பைக்கே இந்த மினி புல்லட் (Mini Bullet) ஆகும்.
1980 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இந்த பைக் மாடல் புழக்கத்தில் இருந்தது. இது தற்போது மிகவும் அரிய வகை பைக் மாடலாக அறியப்படுகின்றது. 197 சிசி, 2 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய மோட்டார்சைக்கிளையே தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி. குறிப்பாக, முற்றிலும் புதிதுபோல அவர் அனைத்து பைக்குகளையும் பராமரித்தும் வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலங்கள் பலர் சொகுசு வாகனங்களைக் காட்டிலும் அரிய வாகனங்களையே அதிகம் விரும்பக் கூடியவர்களாகக் காட்சியளிக்கின்றனர். அந்த மாதிரியான ஓர் நபரே விஜய் சேதுபதியும் என்பது சமீபத்திய பேட்டியின் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது. விரைவில் மேலே பார்த்த அரிய வகை பைக்குகளுடன் சேர்த்து இன்னும் சிலவற்றையும் அவர் இணைப்பார் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








