தமிழ் பட டைரக்டரை விவாகரத்து செய்துவிட்டு நண்பரின் கரம் பிடித்த நடிகைக்கு இவ்ளோ காஸ்ட்லியான கார் பரிசா!
தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் அமலா பால்-ம் ஒருவர். இவர் தற்போது மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தன்னுடைய கார் கொள்முதல் பற்றிய தகவலை அவர் இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த கார் அவரின் நண்பரும், கணவருமான ஜெகத் தேசாய் பரிசாக வழங்கி இருக்கின்றார். கடந்த நாட்களில் மிக அதிக அளவில் படங்களில் நடித்து வந்த அமலா பால் தற்போது மிகவும் குறைவாகவே படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக, தமிழ் படங்களில் அவர் பெரிய அளவில் நடிப்பதே இல்லை.
முதல் கணவரான இயக்குநர் ஏஎல் விஜயை விவாகரத்து செய்த பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிப்பதை மிகப் பெரிய அளவில் குறைத்துக் கொண்டார் என்பது கவனிக்கத்தகுந்தது. இவர் தமிழ் திரை உலகில் விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா உள்ளிட்டமுன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.

இதுமட்டுமல்ல மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்டார்களுடன் நடிகை அமலா பால் நடித்திருக்கின்றார். இத்தகைய நடிகையே இப்போது வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகின்றார். கடைசியா இவரது நடிப்பில் வெளிவந்த படம் 'லெவல் கிராஸ்' ஆகும். இந்த படம் அவருக்கு மீண்டும் மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
இதுதவிர மேலும் சில பல படங்களில் அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே நடிகை அமலா பாலுக்கு மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார் பரிசாக கிடைத்திருக்கின்றது. அது பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் இது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் எல்டபிள்யூபி (5 Series LWB) கார் மாடல் ஆகும்.
இந்தியாவில் 530 எல்ஐ எம் ஸ்போர்ட் (530Li M Sport) எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 72.90 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை ஒரு கோடி ரூபாயைகூட நெருங்க வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய காஸ்ட்லியான காரையே நடிகை அமலா பால்-க்கு அவரது கணவர் ஜெகத் தேசாய் தற்போது பரிசாக வழங்கி இருக்கின்றார். இது ஒட்டுமொத்த திரை உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் அமைந்திருக்கின்றது.

இது ஓர் அட்வான்ஸ்டு ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய மற்றும் நீளமான வீல் பேஸைக் கொண்ட செடான் ரக கார் மாடல் ஆகும். டைட்டானியம் ப்ரான்ஸே மற்றும் அலுமினியம் சேடினேட்டட் எனும் இரண்டு விதமான வண்ண ஆப்ஷன்களில் இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த காரின் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக கிட்னி கிரில், அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட், 19 அங்கு எம் அலாய் வீல், எம் ஸ்போர்ட் கார்களுக்கு உரித்தான வெளிப்பக்கம், ஐந்து எனும் எழுத்து ஆகியவற்றை இந்த காரில் சேர்த்திருக்கின்றனர்.
வெளிப்புறத்தை மட்டுமல்ல காரின் உட்பக்கத்தையும் மிகவும் அழகானதாக தயார் செய்திருக்கின்றது பிஎம்டபிள்யூ நிறுவனம். அந்த வகையில், காரின் காக்பிட்டை அலங்கரிக்கும் விதமாக கிராஃப்டட் கிளாரிட்டி வகை கண்ணாடிகளைப் பயன்படுத்தி அலங்கரித்திருக்கின்றனர். இத்துடன், பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆம்பியன்ட் லைட், இரட்டை வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை, மர பொருட்களாலான அலங்கரிப்பு ஆகிய வேலைகளையே இந்த காரில் அவர்கள் பார்த்திருக்கின்றனர்.
இதேபோல், சௌகரியமான டிராவல் அனுபவத்திற்காக பின் பக்கத்தில் சற்றே கூடுதலான லெக் ரூம், 4 ஜோன்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், போவர்ஸ் மற்றும் விங்கின்ஸ் உள்ளிட்ட வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டிரைவிங் அசிஸ்டன்ஸ் பார்க்கிங் அசிஸ்டன்ட், முன் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, கார் இணைப்பு அம்சம், செல்போனையே சாவியாக பயன்படுத்தும் அம்சம், பிஎம்டபிள்யூவின் லைக் காக்பிட் பிளஸ் அம்சம் என ஏகப்பட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் வளைவான 14.9 இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தியர்களைக் கவரும் விதமாக இந்த காரின் உட்பக்கத்தில் ஓர் கேமிரா வழங்கி இருக்கின்றனர். அது புகைப்பட மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுக்கும் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்தியாவில் யுட்யூபர்கள் மற்றும் டிராவல் விலாக் செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த அம்சத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் 5 சீரிஸ் காரில் வழங்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.
2.0 லிட்டர் டர்போசார்ஜட், 4 சிலிண்டர் எஞ்சினே அது ஆகும். இத்துடன் 48 V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எஞ்சின் ஆகும். அதிகபட்சமாக 254 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 6.5 செகண்டுகளே போதுமானது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இந்தியாவில் இந்த பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் எல்டபிள்யூபி சொகுசு கார் மாடல் பல்வேறு கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. குறிப்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் எல்டபிள்யூபி (Mercedes-Benz E-Class LWB) மற்றும் ஆடி ஏ6 (Audi A6) உள்ளிட்ட கார் மாடல்களுக்கே இது மிகப் பெரிய போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இவ்வளவு அதிக ஆற்றலையும், அதிக சிறப்புகளையும் தாங்கிய ஆடம்பர காரையே அமலா பாலுக்கு அவரது கணவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது அவர் சற்றே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை வீடியோ வாயிலாக நம்மால் பார்க்க முடிகின்றது. திருமண வாழ்க்கை, குறிப்பாக, பிரசவத்திற்கு பின்னர் அவர் கொஞ்சம் சேஞ்சாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications








