250 கோடி பணத்தை தூக்கி வீசிட்டு சொந்த காலில் நிற்கும் தமிழ் நடிகை! ரெண்டரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!
இந்தியாவில் பிரபல மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்தான் சமீப காலமாக அதிக அளவில் விவாகரத்து பெற்று வருகின்றனர். பிரபல மனிதர்களின் விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது, அனைவரும் கவனிக்க கூடிய ஒரு விஷயமாக இருப்பது ஜீவனாம்சம் (Alimony) ஆகும். இந்திய கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) மற்றும் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma) ஆகியோர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
அப்போது தனஸ்ரீ வர்மாவிற்கு, 4.75 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க, யுசுவேந்திர சஹால் தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டது. இதையடுத்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்களால் தனஸ்ரீ வர்மா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து பெற்று விட்டு, பெரிய தொகையை ஜீவனாம்சமாக பெறுவதுதான் பலரின் இலக்கு என்பதே நெட்டிசன்களின் குற்றச்சாட்டு.

அதாவது திருமணம் என்பது தற்போது ஒரு வியாபாரம் போல் மாறி விட்டது என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் எதிலும் சிக்காமல் நடிகை ஒருவர் விவாகரத்து பெற்றுள்ளார். அவர் சமந்தா (Samantha) ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.
இவருக்கும், முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவிற்கும் (Naga Chaitanya) இடையே, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டிலேயே அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அந்த சமயத்தில் நாகசைதன்யா தரப்பில் சுமார் 250 கோடி ரூபாயை சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதில் இருந்து ஒரு ரூபாயை கூட சமந்தா ஜீவனாம்சமாக பெறவில்லை என கூறப்படுகிறது. மாறாக அவர் தனது சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் சமந்தா மீதான மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில் சமந்தாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், விமான நிலையம் ஒன்றில் இருந்து வெளியே வரும் சமந்தா, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) கார் ஆகும்.
சமந்தா பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்450 4மேட்டிக் (S450 4Matic) வேரியண்ட் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்த காரின் டாப் வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் 1.90 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) இந்த கார் விற்பனையாகி கொண்டுள்ளது.
இதன் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஷாருக்கான் (Shah Rukh Khan), அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), தீபிகா படுகோனே (Deepika Padukone) மற்றும் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) உள்ளிட்ட பிரபலங்கள் பலரிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் உள்ளது.
தற்போது சமந்தா பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் காரில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
பனரோமிக் சன்ரூஃப், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 20 இன்ச் அலாய் வீல்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமந்தா நடிப்பை போலவே, சொகுசு கார்களில் பயணம் செய்வதையும் விரும்ப கூடியவர். அவரது கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி. உண்மையில் சமந்தாவின் கார் கலெக்ஸன் மிகப்பெரியது. ஏராளமான விலை உயர்ந்த கார்களை எல்லாம் சமந்தா வைத்துள்ளார்.
இதில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG), போர்ஷே கேமென் ஜிடிஎஸ் (Porsche Cayman GTS), ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


Click it and Unblock the Notifications








