வெளிநாட்டில் மகன் வாங்கிய கார பார்த்து மெய்சிலிர்த்து போன தமிழ் நடிகை! சூர்யவம்சம் படத்துல நடிச்சவங்களா இது!!!
தமிழ் திரைப்பட பிரியர்களின் மனம் கவர்ந்த படங்களில் ஒன்றாக 'சூர்ய வம்சம்' இருக்கின்றது. இந்த படத்திற்கு இப்போதும் ரசிகர்கள் பலர் உள்ளனர். நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், மணிவண்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளியாகிய படமே சூர்ய வம்சம். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர்களில் சத்யபிரியா-வும் ஒருவர் ஆவார். ஹீரோயின் தேவயானிக்கு அம்மாவாக இவர் தோன்றியிருப்பார். இந்த படத்தில் மட்டுமில்லைங்க பாட்ஷா படத்திலும் நடிகர் ரஜினிக்கு அம்மா ரோலில் இவர் நடித்திருப்பார்.
இதுபோன்று பல முன்னணி தமிழ் படங்களில் சத்யபிரியா நடித்திருக்கின்றார். மேலும், தற்போது டிவி சீரியல்களிலும் சத்யபிரியா நடித்து வருகின்றார். இவருடைய மகன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருடைய வீட்டிற்கே சமீபத்தில் சத்யபிரியா சென்றிருக்கின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய மகன் புதிதாக அங்கு டெஸ்லா எலெக்ட்ரிக் கார் (Tesla Electric Car) ஒன்றை வாங்கி இருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், அந்த காரின் சிறப்பம்சங்களில் ஒன்றான டான்ஸ் ஆடும் திறனை வெளிக்காட்டக் கூடிய வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார். டெஸ்லா-வின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான மாடல் எக்ஸ் (Model X)-ஸையே சத்யபிரியாவின் மகன் வாங்கி இருக்கின்றார். இந்த கார் அமெரிக்காவில் 65,990 டாலர்களுக்கு விற்கப்படுகின்றது.
இது ஓர் முழு சார்ஜில் 326 மைல் ரேஞ்சை வழங்கும். அதாவது, 520 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் இந்த காரில் ஓர் ஃபுல் சார்ஜில் பயணிக்க முடியும். இதுமட்டுமில்லைங்க, அதீத ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய கார் மாடலாகவும் இந்த எலெக்ட்ரிக் காரை டெஸ்லா தயார் செய்திருக்கின்றது.
இதற்கு வெறும் 2.5 செகண்டுகளே போதும், அதற்குள்ளாக பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை அசால்டாக மாடல் எக்ஸ் தொட்டுவிடும். இத்தகைய அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் மோட்டாரையே இந்த காரில் டெஸ்லா வழங்கி இருக்கின்றது. 1,020 எச்பி ஆற்றலை உருவாக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரே டெஸ்லா மாடல் எக்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதுமட்டுமில்லைங்க, அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகவும் இது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 17 அங்குல தொடு திரை ஒன்று இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இது டிரைவருக்கு தேவையான தகவல்கள் மட்டுமின்றி அட்வான்ஸ்டு பயன்பாட்டு அனுபவத்தையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்துடன், பல டிவைஸ்களை (ஒன்றிற்கும் மேற்பட்ட கருவிகளை) இணைத்துக் கொள்ளும் திறன் கொண்ட ப்ளூடூத், வேகமாக செல்போன்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட வயர்லெஸ் சார்ஜர், 360 வாட் திறன் கொண்ட யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் உள்ளிட்டவையும் மாடல் எக்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, 22 ஸ்பீக்கர்கள் கொண்ட 960 வாட் ஆடியோ சிஸ்டம், பறவைகளின் றெக்கையை போல திறக்கும் பின் பக்க கார் கதவுகள், தானாக திறக்கும் மற்றும் மூடும் வசதிக் கொண்ட முன் பக்க டோர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்கள் சுலபமாக பயணிகள் ஏறுதல் மற்றும் இறங்குவதை உறுதி செய்யும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது. அது காரின் பின் பக்கம், பக்கவாட்டு பகுதி மற்றும் முன் பக்கம் என அனைத்தும் தன்னுடைய கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து நோட்டமிடும்.
இதன் வாயிலாக மோதல் உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும், டெஸ்லா தன்னுடைய சொந்த தயாரிப்பான விஷன் எனும் அம்சத்தையும் இந்த காரில் சேர்த்துள்ளது. இது அருகாமையில் உள்ள வாகனங்களின் இயக்கத்தை நோட்டமிடும். இதற்கேற்ப காரை இயக்கவும் அது அறிவுறுத்தும். மிக முக்கியமாக பார்க்கிங் உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய பங்களிப்பை இந்த அம்சம் வழங்கும்.
இதுமட்டுமல்ல இந்த காருக்கு தானாக இயங்கும் திறனையும் டெஸ்லா வழங்கி இருக்கின்றது. ஆகையால் ஓட்டுநர் இல்லாமலேயே இந்த காரில் பயணிக்க முடியும். குறிப்பாக, குறுக்கே ஏதேனும் வாகனம் அல்லது வேறு ஏதேனும் ஜீவராசிகள் வந்தால் பிரேக் பிடித்தல் மற்றும் வேகத்தை குறைத்தல் உள்ளிட்டவற்றை அது செய்யும்.
தொடர்ந்து, தானாகவே லேன்-களை மாற்றியும் அது பயணிக்கும். இத்தகைய அதீத திறன்களைக் கொண்ட டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் காரையே சத்யபிரியாவின் மகன் அமெரிக்காவில் வாங்கி உள்ளார். இந்த கொள்முதலையே தற்போது பெருமையுடன் நடிகை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா கார்கள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதன் அதிகாரப்பூர்வ வருகை இன்னும் விரைவிலேயே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் டெஸ்லா தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








