கோடி ரூபா காரில் கோயிலுக்கு வந்த மெழுகு சிலை! சேலை எல்லாம் கட்டி ஆள் அடையாளமே தெரியாம மாறீட்டாங்க! அவங்களா இது
இந்திய சந்தையில் ஆஃப்-ரோடு சாகச திறன்களுடன் கூடிய சொகுசு எஸ்யூவி (Luxury SUV) கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த ரகத்தை சேர்ந்த கார்களைதான் விரும்புகின்றனர். அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar). இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய ஒரு கார் என்பதால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாகவும் திகழ்கிறது.
எனவே திரையுலக நடிகர், நடிகைகள் பலரை ரேஞ்ச் ரோவர் வெளார் காரில் அடிக்கடி காண முடியும். இந்த வரிசையில் தற்போது பிரபலமான நடிகை ஒருவர் ரேஞ்ச் ரோவர் வெளார் காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். உண்மையில் தமன்னாவிற்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு அவர் பிரபலம்.
இருப்பினும் சமீப காலமாக அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பது குறைந்துள்ளது. எனினும் சமீப காலமாக பொது இடங்களுக்கு அவர் விலை உயர்ந்த கார்களில் வந்து செல்லும் வைரல் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவுகின்றன. இந்த வரிசையில்தான் அவரது தற்போதைய வைரல் வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.

பொதுவாக தமன்னா பொது இடங்களுக்கு மாடர்ன் உடைகளில்தான் வந்து செல்வார். ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், அவர் சேலையில் காரில் இருந்து இறங்குவதை நம்மால் காண முடிகிறது. மும்பையில் (Mumbai) உள்ள கோயில் ஒன்றுக்கு அவர் வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் அவர் சேலையில் வந்து சென்றுள்ளார். அவர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வெளார் கார் தற்போதைய நிலையில் 87.90 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.10 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.
இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) போன்ற கார்களுடன், ரேஞ்ச் ரோவர் வெளார் போட்டியிட்டு வருகிறது.
ரேஞ்ச் ரோவர் வெளார் காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமன்னா பாட்டியா சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரது கார் கலெக்ஸனில் (Car Collection), பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (Land Rover Discovery Sport) உள்பட பல்வேறு கார்கள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








