தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
தமிழ் திரையுலகில் தோன்றி மற்ற திரையுலகில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் டெய்சி போபன்னா. தமிழில் 'இன்று முதல்' மற்றும் 'சக்கர வியூகம்' என இரண்டு படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கின்றார். இதில், இன்று முதல் படமே தமிழில் அவர் தோன்றிய முதல் படம் ஆகும். இதேபோல், அவருக்கும் அதுவே முதல் படம் ஆகும்.
ஆமாங்க, இந்த படத்தின் வாயிலாகவே அவர் திரை துறைக்கே அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு பின்னர் கன்னடா திரையுலகில் அதிக பிசியாக மாறிவிட்டார். சொல்லப்போனால் 2003 ஆம் ஆண்டில் 'இன்று முதல்' படத்திற்கு பின்னர் 2008-லேயே 'சக்கர வியூகம்' படத்தில் அவர் தோன்றினார்.

இதுதவிர, தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 41 வயதான இந்த நடிகை இப்போதும் மிகவும் இளமையாகவும், அதே இளமையான துடிப்புடன் அவர் இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டெய்சி போபன்னா தற்போது ஓர் செயலைச் செய்திருக்கின்றார்.
புடவைக் கட்டிக் கொண்டு சூப்பர் பைக் ஒன்றில் அவர் வலம் வரும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. நடிகை டெய்சி போபன்னா சமீபத்தில் டுகாட்டி மான்ஸ்டர் சூப்பர் பைக்கை சமீபத்தில் வாங்கி இருந்தார். இந்த பைக்கிலேயே அவர் ஓர் குட்டி ஜாலி ரைடு சமீபத்தில் சென்றிருக்கின்றார்.
அந்த வீடியோவையே அவர் அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். ரைடின்போது அவர் தலைக்கவசம் அணியவில்லை. அவர் மட்டுமின்றி அவருடன் பயணித்த மற்றொருவரும் தலைக்கவசம் அணியவில்லை. இந்த நிகழ்வே தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது. இந்தியாவில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும், உடன் அமர்ந்து பயணிப்பவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
இதனால்தான் டெய்சி போபன்னாவின் இந்த செயல் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது. எனவே விரைவில் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் டெய்சி போபன்னாவின் இந்த வீடியோ அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிக வேகத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் க்யூட்டாக புடவையை அணிந்துக் கொண்டு பைக்கை இயக்கி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, அவருடைய டுகாட்டி மான்ஸ்டர் பைக் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் 900 சிசி-க்கும் அதிமான எஞ்சின் திறனைக் கொண்ட பைக் மாடல் ஆகும். இத்தகைய பைக்கிலேயே அவர் கெத்தாக வலம் வரும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த பைக் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 12.5 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது ஓர் சூப்பர் நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் ஆகும். இந்த பைக்கின் முன் பக்கத்தில் 43 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், இந்த பைக்கில் பிரீமியம் மற்றும் அதிக பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்கும் அம்சங்களையும் டுகாட்டி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ், பவர் லான்ச், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் மற்றும் ரைடு-பை-ஒயர் ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் ஆகியவையே அவை ஆகும். 937 சிசி, எல்-ட்வின், லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 93 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெய்சி போபன்னாவைப் போல இன்னும் பல பிரபலங்கள் இதற்கு முன்னதாக ஹெல்மெட் அணியாமல் சாலையில் பயணித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களில் சிலருக்கு உடனடியாக காவல்துறை அபராதம் விதித்து இருக்கின்றது. அந்தவகையிலேயே, டெய்சி போபன்னாவிற்கும் மும்பை காவல்துறை அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








