நடிகர் ஜீவா பொழச்சதுக்கு காரணமே இந்த காருதானா! அதோட விலை ரொம்ப அதிகம்னு நினைச்சுடாதீங்க.. ஃபீல் பண்ணுவீங்க!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஜீவா-வும் ஒருவர் ஆவர். இவர் சமீபத்தில் மிகப் பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். குறுக்கே வந்த நபர் மீது மோதுவதை தவிர்க்க காரை டிவைடரின் மீது மோதியதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மிகப் பெரிய விபத்தில் ஜீவாவின் கார் சிக்கியது. இருப்பினும், நடிகர் ஜீவாவும், அவருடன் பயணித்த அவரின் மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குறிப்பாக, ஜீவாவிற்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை என தெரிகின்றது. விபத்தின்போது நிகழ்வை உள்ளூர் வாசி ஒருவர் படம் பிடித்திருக்கின்றார்.

அந்த காட்சிகளின் அடிப்படையிலேயே ஜீவா காயங்கள் இன்றி தப்பியதும், அதேவேளையில், அவரின் கார் மிக மிக மோசமான சேதங்களுக்கு ஆளாகியிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய கடுமையான சேதங்களுக்கு இடையிலும் பயணிகளுக்கு இந்த அளவிற்கு பாதுகாப்பை வழங்கியது என்ன கார் மாடல் என்பதே பலரின் சந்தேகமாக அமைந்துள்ளது.

After car crashed jeeva arguing with public

நடிகர் ஜீவா மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர் என்பதால் அந்த கார் கட்டாயம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் என பலரால் கருதப்படுகின்றது. ஆனால், அதுதான் இல்லை. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வழக்கமான பட்ஜெட் விலைக் கொண்ட கார் மாடல்களில் ஒன்றையே அவர் அப்போது பயன்படுத்தியிருக்கின்றார்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) கார் மாடலையே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் டொயோட்டாவிற்காக தயார் செய்யப்பட்ட ஓர் கார் மாடலே இதுவாகும்.

Crashed toyota urban cruiser hyryder pic

இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 11.14 லட்சம் மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் அதிகபட்ச விலையே 19.99 லட்சம் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய ஓர் கார் மாடலே கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையான பாதுகாப்பை விபத்தின்போது ஜீவாவிற்கு வழங்கி இருக்கின்றது.

பட்ஜெட் விலைக் கொண்ட காராக இது இருந்தாலும் தொழில்நுட்ப அம்சங்களிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் தலை சிறந்த கார் மாடலாக அது காட்சியளிக்கின்றது. குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக ஏர் பேக்குகள், இபிடி (EBD) உடன் கூடிய ஏபிஎஸ் (ABS) மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் செய்ய உதவக் கூடிய கேமிரா உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து அட்வான்ஸ்டு பாடி ஸ்டிரக்டரைக் கொண்டே இந்த கார் மாடலை டொயோட்டா கட்டமைத்திருக்கின்றது. அதாவது, விபத்தின்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்கிக் கொள்ளும் ஃப்ரேமே இந்த காரின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, க்ரூஸ் கன்ட்ரோல், தானாக இருக்கிக் கொள்ளும் திறன் கொண்ட சீட் பெல்ட் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய திறனே நடிகர் ஜீவாவை மாபெரும் விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கின்றது. இந்த விபத்தில் ஜீவாவின் காரின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்திருக்கின்றது. குறிப்பாக, பம்பர், பான்னெட், ஹெட்லைட் மற்றும் கிரில் உள்ளிட்டவை முற்றிலுமாக சேதமுற்றிருக்கின்றன. இந்த சேதத்தினால் இது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் தானா என்பதே தெரியாமல் போயிருக்கின்றது.

மேலும், இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகன ஓட்டியான மணிகண்டன் என்பவருக்கு சற்று கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டு இருக்கின்றார். தொடர்ந்து, சிறு காயங்களுக்காக நடிகர் ஜீவாவின் மனைவியும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்கான துள்ளியமான காரணங்கள் தெரியவில்லை. இருப்பினும், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென ஜீவாவின் காருக்கு முன்னால் வந்ததே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகின்றது. நாட்டில் செல்போன் பேசியபடி பயணிப்பவர்கள், சாலையின் நடுவில் நடப்பவர்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றால் அரங்கேறும் விபத்துகள் அதிகமான வண்ணம் உள்ளது. இதற்கு சான்றாகவே இந்த விபத்து சம்பவமும் தற்போது அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 13:55 [IST]
English summary
Tamil movie star jeeva and his wife saved by toyota hyryder car while car crash
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X