மற்ற மாநிலங்களை எல்லாம் பொறாமைப்பட வைத்த தமிழ்நாடு! செந்தில் பாலாஜி மேட்டரையே இது தூக்கி சாப்பிட்றும்!
வாகன உற்பத்தி துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு (Tamil Nadu) திகழ்ந்து வருகிறது. ஆசியாவின் டெட்ராய்டு (Detroit of Asia) என பெயர் கிடைக்கும் அளவிற்கு சென்னையை (Chennai) சுற்றிலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன.
ஹூண்டாய் (Hyundai), ரெனால்ட்-நிஸான் (Renault-Nissan) மற்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) போன்ற நிறுவனங்களின் கார், பைக் உற்பத்தி தொழிற்சாலைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். அத்துடன் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற சொகுசு கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் கூட, சென்னையில்தான் இயங்கி கொண்டுள்ளன.

ஆனால் உலகம் தற்போது மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஐசி இன்ஜின் (Internal-combustion Engine) வாகன துறையை போல், எலெக்ட்ரிக் வாகன துறையிலும் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக மாற தொடங்கியுள்ளது.
ஓலா (Ola), ஏத்தர் (Ather), சிம்பிள் எனர்ஜி (Simple Energy) மற்றும் (Ampere) உள்பட பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துள்ளன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 43 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை (Investments) தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

அத்துடன் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் (Jobs) கிடைத்துள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டை நோக்கி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் இன்னும் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் உடனான கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு தற்போது நடத்தியுள்ளது.
தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ''அடுத்த 5 ஆண்டுகளில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில், 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான முதலீட்டை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில், தமிழ்நாடு மிகப்பெரிய தொகைகளை முதலீடாக ஈர்த்து வருவது, பல்வேறு வழிகளில் பலன் அளிக்கும். மாநிலத்தின் பொருளாதாரம் உயர்வது மற்றும் மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறைவது போன்ற நன்மைகள் இதில் மிகவும் முக்கியமானவை ஆகும்.


Click it and Unblock the Notifications








