பிரச்சாரமே பண்ணாம ஜெயிக்க போறாங்க! இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 (Tamil Nadu Budget 2024-25) இன்று (பிப்ரவரி 19) தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் (Lok Sabha Election) நெருங்குவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Finance minister Thangam Thennarasu) வெளியிட்டுள்ளார்.

இதில், இந்த நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதவிர 500 எலெக்ட்ரிக் பஸ்கள் (Electric Buses) வாங்கப்படும் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

M. K. Stalin

குறிப்பாக எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரவிருப்பது நல்ல விஷயம் ஆகும். டெல்லி (Delhi) மற்றும் பெங்களூர் (Bangalore) என இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லி, உலகிலேயே அதிகளவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட டெல்லியில் புதிதாக 350 எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. தற்போதைய நிலையில் டெல்லியில் ஒட்டுமொத்தமாக 1,650 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பெங்களூர் நகரிலும் எலெக்ட்ரிக் பஸ்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

Tamil Nadu Budget

ஆனால் சென்னை (Chennai) மற்றும் கோவை (Coimbatore) தமிழகத்தில் எந்தவொரு நகரத்திலும் இன்னும் சொல்லி கொள்ளும் வகையில், எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்பையடுத்து, தமிழகத்தில் இந்த நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது. ஏனெனில் பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தங்களது உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஓசூரில் (Hosur) அமைந்துள்ள ஓலா (Ola) தொழிற்சாலையை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

ஆனால் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் வேகம் காட்டிய தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் காலம் தாழ்த்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். எனினும் வரும் காலத்திலாவது, இந்த நிலைமையை மாற்றினால் உண்மையில் மகிழ்ச்சியே!

எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன. இந்த காரணத்திற்காகதான், டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 15:07 [IST]
English summary
Tamil nadu budget 2024 25 3000 new buses to hit roads
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+