கார்/ பைக் விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது? நாளை வெளியாகும் தமிழக பட்ஜெட்டில் குண்டு வெடிக்குமா?
தமிழக அரசு நாளை சட்டமன்றத்தில் தனது 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிடப்போகும் பட்ஜெட்டால் வாகனம் வாங்குவதற்கான செலவு அதிகமாகுமா? குறையுமா? தமிழகத்திற்கு அதிகமான முதலீட்டை ஈர்க்க என்ன அம்சங்கள் இடம் பெறப்போகிறது? எதிர்பார்ப்புகள் குறித்த விரிவான விபரங்களை இங்கே பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கான அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. மற்ற மாநில பட்ஜெட்களில் வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கப்போவதாக அறிவிப்புகள் வ வெளியாகியுள்ளன. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாக துவங்கியுள்ளன. இந்த வாகனங்கள் சுற்றுசூழலுக்கு குறைவான மாசுவை ஏற்படுத்துவதால் மக்கள் இந்த ரக வாகனங்களை அதிகம் வாங்க வேண்டும் என மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு தகுந்தார் போல பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஈர்ப்பு இன்னும் ஏற்படவில்லை. ஒரளவிற்கு மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்ப ஆரம்பித்தாலும் கிராமப்புற மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகிறனர்.
இந்நிலையில் கடந்தமாதம் மத்திய பட்ஜெட் முடிவடைந்த நிலையில் மாநில பட்ஜெட் தற்போது ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் ரூ30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 6 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே போல இலகு ரக கமர்ஷியல் வாகனங்களுக்க 7 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கார்களுக்கான வரியை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் வாகனம் வாங்குபவர்கள் இனி அதிகம் செலவு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் நாளை (14ம் தேதி) தாக்கலாகவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் வருமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த மாற்றம் வந்தால் ஏப்1ம் தேதிக்கு பிறகு வாகனம் வாங்கும் போது செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே நேரம் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்காக உ.பி மாநிலம் ஏற்கனவே வரி விலக்கு அறிவித்துள்ள நிலையில் அப்படியான அறிவிப்பு வெளியானால் இவி மற்றும் ஹைபிரிட் வாகனங்களை வாங்கபவர்களுக்கு செலவு குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக மாறி வருகிறது.
ஏகப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தான் ஆலை அமைத்து வாகனங்களை உற்பத்தி செய்கிறார்கள். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் தமிழகத்திற்கு வரவும், முதலீட்டை ஈர்க்கவும் பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்புகள் வருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் வியட்நாட் நாட்டைச்சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான சலுகை அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக பட்ஜெட்டை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பட்ஜெட் அறிவிப்பை பொருத்தே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் விற்பனை யுக்திகளை திட்டமிடுவார்கள். புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை மனதில் வைத்து தங்கள் முடிவை எடுப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications








