வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்ற மாஸான திட்டம் ஒன்று தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. டெக்னாலஜியில் தெறிக்க விடும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதன்மையானது. குறிப்பாக சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி கொண்டு படாதபாடு பட்டு வரும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் இந்தியாவில் மந்த கதியில்தான் நடந்து வருகின்றன. இது போதாதென்று முக்கியமான சாலைகள் பல்வேறு வழிகளில் ஆக்கிரமிப்பும் செய்யப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சற்று விரிவாக்கம் செய்தால் கூட போக்குவரத்து நெரிசல் குறையும்.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

அத்துடன் ஒரு சிலர் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் பார்க்கிங் செய்து விட்டு செல்கின்றனர். அவற்றை வாகன உரிமையாளர்கள் மீண்டும் எடுக்க நீண்ட நேரமாகிறது. இவ்வாறு பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டால், அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

வாகன ஓட்டிகள்தான் படாதபாடு படுகின்றனர் என்றால், சில சமயங்களில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் அவல நிலை இங்கு காணப்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் உள்ளே இருப்பவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவதற்கான அபாயம் உள்ளது.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எனவே ஆம்புலன்ஸ்கள் வந்தால் அதற்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாமல் மற்ற வாகன ஓட்டிகள் முறையாக வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் அந்த இடத்தை சுலபமாக கடப்பதை உறுதி செய்வது என்பது ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் கடமை. ஆனால் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் டிராபிக் சிக்னல்களில் சிக்கி கொள்கின்றன.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

அதாவது சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், முன்னே இருக்கும் ஒரு சில வாகன ஓட்டிகள் நகர மறுக்கின்றனர். சிகப்பு விளக்கு எரிவதால், சிக்னலை மீறி செல்லலாமா? வேண்டாமா? என ஏற்படும் குழப்பமே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறும் வரை ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

உண்மையில் சட்டம் என்ன சொல்கிறதென்றால், உங்கள் பின்னால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் பட்சத்தில், சிகப்பு விளக்கு எரிந்தாலும் கூட, நீங்கள் சிக்னலை கடந்து செல்ல முடியும். இதில், தவறேதும் இல்லை. ஆனால் இந்த விதிமுறையை வாகன ஓட்டிகள் பலரும் அறிந்திருப்பதில்லை.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

எனவே ஆம்புலன்ஸ் சிக்னலை கடப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த சூழலில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவுள்ளது. அதுவும் தமிழகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் படி, ஆம்புலன்ஸ்கள் வந்தால் சிக்னல் தானாகவே பச்சை விளக்கிற்கு மாறி விடும்.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

அது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதா? அதற்கான விடையை இனி பார்க்கலாம். அதாவது டிராபிக் சிக்னல்களில் சென்சார் ஒன்று பொருத்தப்படும். இது ஆம்புலன்ஸ் வருவதை 100 மீட்டருக்கு முன்னதாகவே கண்டறிந்து, பச்சை விளக்கை ஒளிர செய்யும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டத்திற்காக புதிய ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

இவற்றில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆம்புலன்ஸ் செல்லும் வழித்தடத்தில், அருகாமையில் உள்ள டிராபிக் சிக்னலுக்கு இந்த சென்சார் சிக்னலை அனுப்பும். இதனை பெற்றவுடன், சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தால், டிராபிக் சிக்னல் தானாகவே பச்சை விளக்கிற்கு மாறி விடும்'' என்றனர். இதன் மூலம் முன்னால் நிற்கும் வாகன ஓட்டிகள் விரைவாக கடந்து செல்வார்கள்.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

இதன் மூலம் நெரிசல் குறைந்து ஆம்புலன்ஸ் வாகனமும் அந்த இடத்தை எளிதாகவும், விரைவாகவும் கடந்து செல்ல முடியும். இந்த உயரிய நோக்கத்துடன்தான் இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கென புதிய ஸ்மார்ட் 108 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேற லெவலுக்கு மாறும் தமிழ்நாடு! மரணத்தின் விளிம்பில் போராடுபவர்களை காப்பாற்றும் மாஸ் திட்டம் இதுதான்

இந்த சூழலில் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை நகரில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தாம்பரத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான சாலையில் உள்ள சிக்னல்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின் படிப்படியாக சென்னை முழுமைக்கும், அதன்பின் தமிழகம் முழுமைக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Credit: Gizbot

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2019, 15:23 [IST]
English summary
Automated Green Corridor For 108 Ambulances In Tamil Nadu. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+